பிஸ்தா அதிக அளவில் விலை கொண்டதாக இருப்பதால் பலரும் இதனை காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடவே தயங்குவர். ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களோ அதன் விலையினை விட மிகவும் அதிகமானதாக இருக்கும்.
பிஸ்தா பருப்பானது அதிக அளவில் புரதம் மற்றும் வைட்டமின் சத்துகளைக் கொண்டுள்ளது. மேலும் பிஸ்தா தலைமுடி வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது, மேலும் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் எண்ணிக்கையினை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
மேலும் பிஸ்தா பருப்பானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரிக்கச் செய்கின்றது. பிஸ்தாவானது மண்ணீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.
குழந்தைகளுக்கு பிஸ்தா பருப்பினை தினசரி என்ற அளவில் கொடுத்து வந்தால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி சிறப்பானதாகவும், ஞாபக சக்தியினை அதிகரிப்பதாகவும் இருக்கும். மேலும் குழந்தைகள் மிகவும் அறிவுக் கூர்மையுடன் செயல்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.
பிஸ்தா இதயநோய்கள் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும்
இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதால் முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது, மேலும் இது நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
பிஸ்தாவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் நிச்சயம் சாப்பிடலாம்.