துருக்கி போடுறது வெறும் ஸ்கெட்ச் இல்ல… அது இந்தியாவோட அமைதியை குலைக்க பார்க்குற ஒரு நயவஞ்சகமான ‘ப்ளாட்’! ஆனால் அதே நேரத்துல பாகிஸ்தான் கூட சேர்ந்துக்கிட்டு துருக்கி பண்றது ‘திரீ பிரதர்ஸ்’ கூட்டணி இல்ல… அது இந்தியாவோட விஸ்வரூபத்துக்கு முன்னாடி நிக்க முடியாம போடுற ஒரு வீணான ‘ப்ளான்’! துருக்கிக்கு வேணும்னா எர்டோகன் ‘பாஸ்’ஆ இருக்கலாம்… ஆனா ஆசியாவோட ரியல் பாஸ் மோடி தான்..!

சர்வதேச அரசியல் விமர்சகர்களின் கணிப்பின்படி துருக்கியின் தற்போதைய வெளியுறவுக்கொள்கை மற்றும் அதன் விரிவாக்கவாத நடவடிக்கைகள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. வரலாற்று ரீதியாக பார்த்தால், துருக்கிக்கும் இந்திய துணைக்கண்டத்திற்கும் இடையிலான…

india vs turkey

சர்வதேச அரசியல் விமர்சகர்களின் கணிப்பின்படி துருக்கியின் தற்போதைய வெளியுறவுக்கொள்கை மற்றும் அதன் விரிவாக்கவாத நடவடிக்கைகள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

வரலாற்று ரீதியாக பார்த்தால், துருக்கிக்கும் இந்திய துணைக்கண்டத்திற்கும் இடையிலான தொடர்பு வெறும் நிலப்பரப்பு சார்ந்தது மட்டுமல்ல, அது ஆழமான சித்தாந்த மற்றும் மத ரீதியான பின்னணியை கொண்டது. உதுமானிய பேரரசு சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய உலகின் ‘கலிபா’ பதவியை வகித்து வந்ததால், அந்த பிம்பம் இன்றும் தெற்காசிய முஸ்லிம்களின் ஆழ்மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய அதிபர் எர்டோகன், இந்த ‘நியோ-ஆட்டோமனிசம்’ எனும் கொள்கையின் மூலம் தன்னை நவீன கால கலிபாவாக நிலைநிறுத்த முயற்சிப்பதும், அதன் மூலம் உலகளாவிய இஸ்லாமிய தலைமையை கோருவதும் இந்தியா போன்ற நாடுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்தியா மீதான துருக்கியின் கசப்பான போக்கிற்கு முக்கிய காரணம், பாகிஸ்தான் மீதான அதன் தளராத விசுவாசம் ஆகும். பாகிஸ்தான், துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து உருவாக்கியுள்ள ‘திரீ பிரதர்ஸ்’ கூட்டணி, பகிரங்கமாகவே இந்தியாவிற்கு எதிரான ஒரு துருவமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் 2025 நவம்பரில் செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளில் துருக்கியின் தொடர்புகள் கசிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி வெறும் ஆயுதங்களையும், ட்ரோன்களையும், உளவு தகவல்களையும் பாகிஸ்தானுக்கு வழங்குவதோடு நிற்காமல், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் ‘ஜிஹாதி’ ஊடுருவல்களை தூண்டிவிடும் ஆபத்தான வேலையையும் செய்து வருவதாக அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.

வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால், 1517-ல் உதுமானியப் பேரரசு மக்கா மற்றும் மதினாவை கைப்பற்றியது முதல், டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாய மன்னர்களின் சித்தாந்த விசுவாசம் துருக்கி கலிபாவை நோக்கியே இருந்தது. முகலாய மன்னர்களும் டெல்லி சுல்தான்களும் அடிப்படையில் துருக்கிய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் தங்கள் அந்தரங்க வாழ்க்கையில் துருக்கிய மொழியையே பயன்படுத்தி வந்தனர் என்பதும் பலரால் அறியப்படாத உண்மை. இந்தியாவில் உருவான ‘கிலாபத் இயக்கம்’ கூட இந்த எல்லை கடந்த விசுவாசத்தின் வெளிப்பாடே ஆகும். இந்த வரலாற்று தொடர்பை இன்று எர்டோகன் மிக சரியாக பயன்படுத்தி, இந்திய துணைக்கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே துருக்கி மீதான ஒரு உளவியல் பிணைப்பை ஏற்படுத்தி வருகிறார்.

புவிசார் அரசியலில் துருக்கியின் பங்கு மிகவும் சிக்கலானது, ஏனெனில் அது நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருந்துகொண்டே, தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளித்து வருகிறது. நேட்டோ உறுப்பினராக இருக்கும் ஒரு நாடு, அதன் மூலம் ஜிஹாதி சித்தாந்தங்களை இந்தியாவிற்குள் கொண்டு செல்வது என்பது கவலைக்குரிய விஷயமாகும். உதுமானிய கலிபாவின் வீழ்ச்சியை வரலாற்றின் மிகப்பெரிய துயரமாக கருதும் எர்டோகன், அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாகவே, பாகிஸ்தானுக்கு முதன்முதலில் அங்கீகாரம் வழங்கிய துருக்கி, இன்றும் காஷ்மீர் விவகாரம் முதல் பல்வேறு சர்வதேச மேடைகளில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் துருக்கிக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே நிலவும் தலைமை போட்டியும் இந்தியாவை பாதிக்கிறது. சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் நவீனத்துவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், துருக்கி தீவிரவாத சித்தாந்தங்களின் மையப்புள்ளியாக மாறி வருகிறது. இந்தியாவின் சில தீவிரவாத மதப்போதகர்களும், சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வினை தூண்டுபவர்களும் துருக்கிக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வது, ஜிஹாதி தீவிரவாதத்தின் சித்தாந்த மையம் தற்போது அரபு நாடுகளில் இருந்து துருக்கிக்கு இடம் பெயர்ந்துள்ளதையே காட்டுகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு பரிமாணங்களை ஒரே நேரத்தில் பாதிக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகும்.

இறுதியாக, அமெரிக்கா மற்றும் நேட்டோ போன்ற உலகளாவிய சக்திகள் தங்களின் புவிசார் அரசியல் நலன்களுக்காக துருக்கியை பயன்படுத்துவது இந்த விளையாட்டை இன்னும் ஆபத்தானதாக மாற்றுகிறது. பெட்ரோ-டாலர் மேலாதிக்கம் மற்றும் கடல்வழி போக்குவரத்து பாதைகளைக் கட்டுப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் போட்டியில் துருக்கி போன்ற நாடுகள் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் சவால் என்பது வெறும் ராணுவ பலத்தோடு முடிந்துவிடாது; இந்த ஆழமான வரலாற்று மற்றும் சித்தாந்த வேர்களை புரிந்து கொண்டு, ‘மூன்றாவது முனை’ எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்பு போரை திறம்பட எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். துருக்கியின் இந்த நயவஞ்சக திட்டங்களை முறியடிக்க விழிப்புணர்வு ஒன்றே சிறந்த ஆயுதமாகும்.