முருங்கைக் கீரை கிராமப் புறங்களில் அதிக அளவில் கிடைக்கும் உணவுப் பொருளாக உள்ளது, மேலும் நகர்ப்புறங்களிலும் இது ஒரு கட்டு ரூ.10 என்ற அளவிலேயே விற்பனையாகின்றது. இத்தகைய முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் குறித்துப் பார்க்கலாம்.
முருங்கைக் கீரை உடல் சூட்டினைத் தணிக்கும் தன்மை கொண்டுள்ளதாக உள்ளது, மேலும் செரிமானப் பிரச்சினையான மலச்சிக்கல் பிரச்சினை இருப்போர் முருங்கைக் கீரையினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவைப்படும் அதிக அளவிலான இரும்புச் சத்தினை அதிகரிக்க இருக்கும் வழி மிக மலிவான விலையில் கிடைக்கப்பெறும் முருங்கைக் கீரை எடுத்துக் கொள்வதுதான்.
முருங்கை இலையுடன் சீரகம், வெண்ணெய் சேர்த்து சூப் செய்து குடித்துவந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் நடக்கும் என்று சொல்லப்படுகின்றது. அதாவது இந்த முருங்கைக் கீரை சூப்பானது இரும்புச் சத்தினை அதிகரிப்பதால் உடலில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிப்பதோடு, தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
மேலும் முருங்கைக் கீரையானது உடல் வலிமையினைக் கூட்டும் தன்மை கொண்டதாக உள்ளது, இதனால் ரத்த சோகைப் பிரச்சினை உள்ளவர்கள் வாரத்தில் மூன்று முறை என்ற அளவில் முருங்கைக் கீரையினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் அல்சர் என்னும் குடல்புண், வாய்ப்புண் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் முருங்கைக்கீரை சூப்பினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் கர்ப்பம் தரிக்க நினைப்போர் அதிக அளவில் முருங்கைக் கீரையினை எடுத்துக் கொண்டால் கர்ப்பப்பையில் உள்ள பிரச்சினைகள் நிச்சயம் சரியாகும்.