தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டிப் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், திருச்சி சூர்யா சமீபத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க பாரதிய ஜனதா கட்சி மிகத்தீவிரமாக முயன்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக சுமார் 1000 கோடி ரூபாய் நிதி மற்றும் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் துணை முதலமைச்சர் பதவி ஆகியவற்றை வழங்க பாஜக தயாராக இருப்பதாக கூறி ஒரு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார்.
பாஜகவின் இந்த அழைப்பை விஜய் ஏற்கும் வகையில் இருந்தால் அவருக்கு ப சலுகைகள் கிடைக்கும் என்றும், மாறாக அவர் மறுக்கும் பட்சத்தில் பல சட்டச் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் திருச்சி சூர்யா எச்சரித்துள்ளார். மத்தியில் ஆளும் கட்சிக்கு இணங்காதபோது, ஒரு அரசியல் தலைவர் எதிர்கொள்ள வேண்டிய அழுத்தங்கள் குறித்து அவர் விரிவாக பேசியுள்ளார். குறிப்பாக, சமீபகாலமாக விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் சிபிஐ விசாரணையின் சட்ட ரீதியான நகர்வுகள் இந்த அழுத்தத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்ற கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.
இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி திரையுலகை சேர்ந்த இரண்டு முக்கிய நபர்களை மட்டுமே சந்தித்து பேசியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒருவர் ரஜினிகாந்த், மற்றொருவர் விஜய். ரஜினிகாந்த் தனது நீண்ட கால அனுபவம் மற்றும் ஆன்மீக அறிவு ஆகியவற்றால் பாஜகவின் அரசியல் பிடியில் சிக்காமல் சாமர்த்தியமாக தப்பித்துக்கொண்டார். அரசியலுக்கு வருவதாக கூறி பின்வாங்கியது அவருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்தது. ஆனால், விஜய் கட்சி தொடங்கி முழுமையாக அரசியலில் இறங்கிவிட்டதால், அவர் இப்போது ‘சிக்கிக் கொண்டதாக’ சூர்யா கருதுகிறார்.
விஜய்யின் தற்போதைய நிலை மிகவும் சவாலானது. ஒருபுறம் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்த வேண்டிய கட்டாயம், மறுபுறம் பாஜக போன்ற தேசிய கட்சிகளின் அழுத்தம் என அவர் இக்கட்டான சூழலில் உள்ளார். ரஜினிகாந்தை போல அரசியலை தள்ளி வைக்க முடியாத நிலையில், பாஜகவின் நிபந்தனைகளுக்கு பணியவில்லை என்றால், விஜய்யை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாஜக வச்சு செய்யும்’ எனத் திருச்சி சூர்யா தனது பேட்டியில் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவின் வியூகம் என்பது தமிழகத்தில் ஒரு வலுவான கூட்டணியை அமைத்து திமுகவை வீழ்த்துவதுதான். அதற்கு விஜய்யின் மக்கள் செல்வாக்கு மிக அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இதனால்தான் இவ்வளவு பெரிய சலுகைகளை அவர்கள் வழங்க முன்வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், விஜய் தனது கொள்கைகளில் உறுதியாக இருந்து, “இந்த முகம் யாருக்கும் பணியாது” என்று மேடைகளில் முழங்குவது பாஜக தரப்பிற்கு ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. விஜய்யின் இந்த துணிச்சல் அவருக்கு பலமான வெற்றியைத் தருமா அல்லது கூடுதல் நெருக்கடிகளை தருமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இறுதியாக, தமிழக அரசியல் என்பது தற்போது ஒரு சதுரங்க ஆட்டத்தை போல மாறியுள்ளது. 1000 கோடி ரூபாய் மற்றும் பதவி ஆசைக்கு இணங்காமல் விஜய் தனது தனித்துவத்தை தக்கவைத்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திருச்சி சூர்யாவின் இந்த கருத்துக்கள் விஜய்யின் தொண்டர்களிடையே ஒருவித விழிப்புணர்வையும், அதே சமயம் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தல் களம் நெருங்க நெருங்க, விஜய்யை சுற்றிப் பின்னப்படும் இந்த அரசியல் வலைகள் இன்னும் இறுக்கமடையும் என்பதில் ஐயமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
