என்னை வீழ்த்த நினைச்சா, நான் விழ மாட்டேன்… என்னைத் தள்ளுனவங்களையே சேர்த்துத் தான் இழுத்துட்டு விழுவேன்! இது ரோகிணியின் சபதம்.. பொய்க்கு கால்கள் கிடையாதுனு சொல்லுவாங்க… ஆனா இன்னைக்கு ரோகிணி சொன்ன பொய், ஓடிப் போய் கோர்ட் கூண்டுல நிக்குது! படித்த முட்டாள் மனோஜ் ஒரு பக்கம், மிரட்டும் ரோகிணி மறுபக்கம்… இதுல சிக்கித் தவிக்கப்போறது என்னவோ விஜயாதான்!

விஜய் டிவியின் முன்னனி தொடரான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், தற்போது கதையின் கருவான ரோகிணியின் ரகசியம் அம்பலமாகி நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இன்றைய எபிசோடில், இந்த வழக்கை தொடர்வதற்காக விஜயா வழக்கறிஞரை சந்திக்கிறார். அப்போது…

23a

விஜய் டிவியின் முன்னனி தொடரான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், தற்போது கதையின் கருவான ரோகிணியின் ரகசியம் அம்பலமாகி நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இன்றைய எபிசோடில், இந்த வழக்கை தொடர்வதற்காக விஜயா வழக்கறிஞரை சந்திக்கிறார். அப்போது இந்த விவகாரங்கள் அனைத்தும் தனது 2வது மகன் முத்துவுக்கு தான் முதலில் தெரியும் என்கிற உண்மையை அவர் உடைக்கிறார். இதை கேட்டு ஆச்சரியமடைந்த வழக்கறிஞர், முத்துவிடம் தான் பேச வேண்டும் என்று கூற, விஜயாவும் முத்துவுக்கு போன் மூலம் தொடர்பு கொள்கிறார். முதல்முறையாக தனது தாயிடமிருந்து அழைப்பு வந்ததை கண்ட முத்து, பழைய கசப்புகளை மறந்து மிகுந்த மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் பேசும் காட்சிகள் நேயர்களை நெகிழச் செய்யும் விதமாக அமைந்துள்ளன.

மற்றொரு புறம், ரவி மற்றும் சுருதி இருவரும் நீத்துவின் மறைமுகமான சூழ்ச்சிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து கொள்கின்றனர். அதே வேளையில், அபார்ட்மெண்டில் பூ விற்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனாவும், அவருக்கு போட்டியாக தொழில் செய்து வரும் சிந்தாமணியும் ஒரே இடத்திற்கு வருகிறார்கள். பூ விற்கும் வாய்ப்புக்காக அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் கதையின் விறுவிறுப்பை சற்றுத் தணிக்கின்றன. இருப்பினும், இந்த காட்சிகள் அன்றாட வாழ்வின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது. முத்து, மீனா, மனோஜ் மற்றும் விஜயா ஆகிய நால்வரும் நீதிமன்றத்திற்குய் வர, முத்து, மீனாவிடம் நீதிபதி தீவிரமாக விசாரணை நடத்துகிறார். அப்போது மீனா தனது வாக்குமூலத்தில், ரோகிணியின் உண்மை தனக்கு முன்பே தெரியும் என்றும், ஆனால் அவர் தன்னை மிரட்டியதால்தான் அதை மறைத்துவிட்டதாகவும் கூறுகிறார். அவரை தொடர்ந்து முத்துவும் தனக்கு தெரிந்த அனைத்து உண்மைகளையும் நீதிபதியிடம் முன்வைக்கிறார். இறுதியாக, நீதிபதியின் விசாரணையில், தனக்கு ஏற்கனவே திருமணமானது உண்மைதான் என்று ரோகிணி ஒப்புக்கொள்வதோடு இன்றைய எபிசோட் ஒரு பெரும் எதிர்பார்ப்புடன் முடிகிறது.

இனி வரும் எபிசோடுகளில், ரோகிணி தனது தரப்பு நியாயங்களை அடுக்க தொடங்கினால் ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து போக வாய்ப்புள்ளது. ரோகிணி தப்பிக்க பல வழிகளை கையாள்வார் என தெரிகிறது. குறிப்பாக, தனக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் விஷயத்தை முன்பே மனோஜிடம் சொல்லிவிட்டதாகவும், குடும்பத்திற்கு பயந்து மனோஜ் தான் அதை மறைத்ததாகவும் கூறி பழியை அவர் பக்கம் திருப்பிவிட வாய்ப்புள்ளது. மனோஜ் இதனை மறுத்தாலும், ரோகிணி தனது நடிப்பு திறமையால் அனைவரையும் நம்ப வைக்க முயற்சிப்பார் என்பது மட்டும் உறுதி.

மேலும், பொருளாதார ரீதியாக தான் அந்த வீட்டிற்கு ஆற்றிய பங்களிப்பை ஒரு துருப்பு சீட்டாக ரோகிணி பயன்படுத்தலாம். மனோஜால் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில், நான்தான் கடை வைத்துக்கொடுத்து அவனை ஒரு நிலைக்கு கொண்டு வந்தேன் என்றும், நான் இல்லையென்றால் அவன் வாழ்க்கையே சீரழிந்துவிடும் என்றும் அவர் நீதிபதியிடம் வாதிடலாம். படித்த முட்டாளாக இருக்கும் மனோஜ் ஏற்கனவே லட்சக்கணக்கில் கடனில் இருப்பதை சுட்டிக்காட்டி, தனது இருப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துவார். இதன் மூலம் நீதிமன்றத்தில் மனோஜுடன் மீண்டும் சேர்ந்து வாழும் வாய்ப்பை அவர் கோரலாம்.

இறுதியாக, ரோகிணி உணர்ச்சிப்பூர்வமான ஒரு நாடகத்தை அரங்கேற்றக்கூடும். தான் மனோஜை உண்மையாகவே காதலிப்பதாகவும், ஆனால் விஜயா மற்றும் முத்து-மீனா ஜோடிதான் தங்களை பிரிக்க பார்ப்பதாகவும் நீதிபதியிடம் முறையிடலாம். தனது வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ள ரோகிணி எத்தகைய எல்லைக்கும் சென்று, இன்னும் பல ஆயிரக்கணக்கான பொய்களை அவிழ்த்து விடுவார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. ரோகிணியின் இந்தத் திடீர் திருப்பங்களால் அண்ணாமலை குடும்பம் சிதறுமா அல்லது மனோஜ் மீண்டும் ரோகிணியை ஏற்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.