தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஏற்படுத்தி வரும் அதிரடி மாற்றங்கள், பல அரசியல் சக்திகளுக்கு தூக்கமில்லாத இரவுகளை பரிசாக அளித்துள்ளன. விஜய்யின் அரசியல் பிரவேசம் வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது ஒரு தீர்க்கமான மாற்றம் என்பதை உணர்ந்த எதிர்தரப்பினர், அவரை தொடக்கத்திலேயே முடக்கிவிட பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களிலும் யூடியூப் தளங்களிலும் விஜய்க்கு எதிராக ஒரு திட்டமிட்ட ‘நெகட்டிவ்’ பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதை நடுநிலைமையாளர்கள் கவனித்து வருகின்றனர். “விஜய்யை முடித்துவிடுங்கள்”, “அவரை அரசியல் ரீதியாக சிதைத்துவிடுங்கள்” என்ற ஒற்றை நோக்கத்துடன் சில சக்திகள் லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சமீபகாலமாக யூடியூப் சேனல்களில் தோன்றும் சில ‘அரசியல் விமர்சகர்கள்’ என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள், சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளை விஜய் மீது சுமத்தி வருகின்றனர். தவெக-வின் கொள்கைகள், விஜய்யின் பேச்சுகள், மற்றும் அக்கட்சியின் கூட்டங்கள் என ஒவ்வொன்றையும் மிக நுணுக்கமாக கிண்டல் செய்வதும், ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதும் இவர்களின் முழுநேர வேலையாக மாறியுள்ளது. ஒரு நபர் ஒரு கருத்தை சொன்னால் அது தனிப்பட்ட விமர்சனம், ஆனால் பல பேர் ஒரே நேரத்தில், ஒரே தொனியில், ஒரே மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தி விஜய்யைத் தாக்குவது என்பது, இதற்கு பின்னால் ஒரு பெரிய ‘பெய்ட் பிஆர்’ நெட்வொர்க் இயங்குவதையே உறுதிப்படுத்துகிறது.
லட்சக்கணக்கில் கைமாறிய பணத்திற்காக தங்கள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, கேமராவிற்கு முன்னால் அமர்ந்து கூவும் இத்தகைய போலி விமர்சகர்கள், விஜய்யின் வளர்ச்சியை தடுக்க முடியும் என்று கனவு காண்கின்றனர். விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் ‘வச்சு செய்யும்’ நோக்கில் இவர்கள் வெளியிடும் வீடியோக்கள், உண்மையில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கூடாரத்திலிருந்து இயக்கப்படுகின்றன. விஜய்யின் அரசியல் வருகை யாருடைய வாக்கு வங்கியை பாதிக்கும் என்று பயப்படுகிறார்களோ, அவர்களே இத்தகைய நிழல் யுத்தத்தை மறைமுகமாக நடத்தி வருகின்றனர். ஆனால், இத்தகைய போலி பிம்பங்கள் நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்பதை வரலாறு பலமுறை நிரூபித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல; தகவல்கள் விரல் நுனியில் இருக்கும் இந்த யுகத்தில், எது உண்மை, எது திட்டமிட்ட பொய் பிரச்சாரம் என்பதை பொதுமக்கள் மிக தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். ஒரு விமர்சகர் நடுநிலையாக பேசுகிறாரா அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு விசுவாசமாக இருந்து கொண்டு விஜய்யை குறிவைக்கிறாரா என்பதை மக்கள் எளிதில் கண்டறிந்து விடுகின்றனர். போலி எது, ஒரிஜினல் எது என்பதை பிரித்தறியும் முதிர்ச்சி தமிழக வாக்காளர்களிடம் பெருகியுள்ளது. விஜய்யின் மீதான இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்கள், உண்மையில் அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு பரிதாபத்தையும், ஆதரவையுமே தேடித்தந்து கொண்டிருக்கின்றன.
விஜய் மீது வைக்கப்படும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை அவர் ஏற்று கொள்வார் என்பதில் ஐயமில்லை, ஆனால் தனிப்பட்ட தாக்குதல்களையும், காசுக்காக செய்யப்படும் வதந்திகளையும் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். சமூக பிரச்சினைகளுக்காக விஜய் குரல் கொடுக்கும் போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, அவர் ஒரு மாநாடு நடத்தும் போதோ அல்லது அறிக்கை வெளியிடும் போதோ மட்டும் துள்ளிக்குதிக்கும் இந்த ‘யூடியூப் போராளிகளின்’ நோக்கம் என்ன என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பணத்திற்காகத் கூவும் இவர்களால், லட்சியத்திற்காக பயணிக்கும் ஒரு தலைவனின் வேகத்தை தடுத்துவிட முடியாது என்பதே நிதர்சனம்.
இறுதியாக, தவெகவிற்கு எதிராக செய்யப்படும் இந்த தொடர் தாக்குதல்கள் விஜய்யை மேலும் பலப்படுத்தும் உரங்களாகவே அமையும். பொய் பிரச்சாரங்களை மூலதனமாக கொண்டு அரசியல் செய்பவர்களுக்கு 2026 தேர்தல் களம் ஒரு தக்க பாடத்தை புகட்டும். மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து, நேர்மையான பாதையில் பயணிக்கும் விஜய்யின் அரசியல் பயணம், இத்தகைய சில்லறை தனமான விமர்சனங்களை கடந்து வெற்றியை நோக்கியே செல்லும். ஒரிஜினல் மக்கள் சக்தி எது என்பதை வாக்குப்பெட்டிகள் நிரூபிக்கும் போது, பணத்திற்காக கூவியவர்களின் குரல்கள் தானாகவே அடங்கிப் போகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
