தேவையான பொருட்கள்
பிரண்டை – ஒரு பிடி
வெங்காயம் – பாதி
காய்ந்த மிளகாய் – 2 அ 3
தனியா – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 3 அ 4 பல்
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – வதக்க
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தாளிக்க
செய்முறை:
பிரண்டையை கழுவி,சிறு துண்டுகளாக நறுக்கவும், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், தனியா, பிரண்டை துண்டுகள், புளி சேர்த்து நன்கு வதக்கவும். பிரண்டை நன்கு வதங்க வேண்டும்.இல்லையெனில்,சாப்பிடும் போது நாக்கு அரிக்கும். பிரண்டை வதங்கியதும், ஆற வைத்து,சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ,கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும். பிரண்டை துவையல் தயார்.
இந்த துவையல் வெறும் சாதத்துடன் நெய்விட்டு சாப்பிடலாம். சாம்பார் சாதம்,ரசம் சாதம்,தயிர் சாதத்துடன் தொட்டும் சாப்பிடலாம்.சுவையாக இருக்கும். பிரண்டையை சட்னியாகவும் செய்து இட்லி, தோசையுடனும் சாப்பிடலாம். பிரண்டை வயதானதால் மூட்டு வலிக்கு சிறந்த மருந்து. எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தாலும் பிரண்டையை சாப்பிட்டு வந்தால் விரைவில் எலும்பு கூடிவரும்