பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் தற்போது விறுவிறுப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இன்றைய எபிசோடில், பாண்டியன் வீட்டிலிருந்து தனது பொருட்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டதை கண்டு தங்கமயில் குடும்பமே நிலைகுலைந்து போகிறது. “வாழ்க்கையே முடிந்துவிட்டது” என தங்கமயில் வழக்கம்போல ஒப்பாரி வைக்க, அவரது பெற்றோர் தேற்ற முயல்கின்றனர். உதவி கேட்டு கோமதி மற்றும் மீனாவுக்கு அவர் அழைப்பு விடுத்தாலும், கோபத்தில் இருக்கும் அவர்கள் தங்கமயிலின் எண்ணை தடை செய்து விடுகின்றனர். இதற்கிடையில், ராஜி தனது தாய் வீட்டுக்குச் செல்ல அனுமதி கேட்க, கோமதி தயங்கினாலும் மீனாவின் ஆதரவுடன் ராஜி தனது பிறந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறார்.
அடுத்தடுத்த காட்சிகளில் மீனாவை சந்திக்கும் வாய்ப்பு தங்கமயிலுக்கு கிடைக்கிறது. அப்போது, “என் வாழ்க்கையைக் காப்பாற்று” என்று அழுதுகொண்டே கெஞ்சும் தங்கமயிலை மீனா மிக கடுமையாகச் சாடுகிறார். “முதலில் இந்த நைநைன்னு அழுறதை நிறுத்துடி” என்று ஆரம்பிக்கும் மீனா, புகுந்த வீட்டின் மீது போலீஸ் புகார் அளித்த அவரது முட்டாள்தனத்தை வறுத்தெடுக்கிறார்.
என் அம்மா சொன்னதை கேட்டுத்தான் அப்படி செய்தேன்” என்று தங்கமயில் கூற, “உனக்கு என்று அறிவு இல்லையா? உன் அம்மாவின் பேச்சை கேட்டால் இந்த ஜென்மத்தில் சரவணனுடன் சேர முடியாது” என்று மீனா எச்சரிக்கிறார்.
அதே சமயம், தங்கமயில் சொன்ன பொய்கள் தவறாக இருந்தாலும், அவர் குடும்பத்தினர் மீது வைத்திருக்கும் அன்பு உண்மையானது என்பதை மீனா அங்கீகரிக்கிறார். “கொஞ்சம் பொறுமையாக இரு, மாமாவும் சரவணனும் உன் அன்பை புரிந்து கொள்வார்கள். அதுவரை உன் அம்மா பேச்சை கேட்டு மீண்டும் எந்த தப்பும் செய்யாதே” என்று அறிவுரை கூறுகிறார்.
மீனாவின் இந்த அதிரடி மாற்றமும், அவர் சரவணன்-தங்கமயில் ஜோடியை சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சிகளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
