சுகர் பேஷண்டுகளும் இந்த தோசையை சாப்பிடலாம்!!

By Staff

Published:


db385c77a304408edc91a9ca445e5986

சுகர் வந்துட்டாலே நாவை கட்டுப்படுத்தனும். எண்ணெய் சேர்க்கக்கூடாது. எதுலாம் சாப்பிடனும்?! சாப்பிடக்கூடாது என பெரிய லிஸ்ட் போடுவாங்க. சுகர் பேஷண்டுகளும் சாப்பிடும் ஒரு தோசையை இன்று பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்….

கோதுமை – அரை கப், 
புழுங்கரிசி – அரை கப், 
பச்சரிசி – அரை கப், 
துவரம் பருப்பு – அரை கப், 
கடலைபருப்பு – அரை கப், 
வெந்தயம் – 2 தேக்கரண்டி, 
மிளகு – 2 தேக்கரண்டி, 
உப்பு – ருசிக்கேற்ப, 
சீரகம் – 2 தேக்கரண்டி, 
கறிவேப்பிலை – 2 கொத்து, 
தூள் பெருங்காயம் – அரை தேக்கரண்டி, 
எண்ணெய் – தேவையான அளவு

56510aa9a7571134bf88443ea68e2cc2

மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடி செய்ய வேண்டும்.

அரிசி, பருப்பு, வெந்தயம், கோதுமையை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைத்த பின் தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த மாவை உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவேண்டும். தட்டி வைத்த சீரகம், மிளகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சுவையான மிளகு சீரக தோசை ரெடி. ஜீரணக்கோளாறு உள்ளவர்களுக்கு மிக நல்லது.

Leave a Comment