நாம் குடிக்கும் காப்பியில் காஃபின்ன்ற பொருள் கலந்திருப்பதால் உடலுக்கு தீங்கு உண்டாகும். சிக்கரியும் உடலுக்கு தீங்கு உண்டாக்கும். உடலுக்கு நன்மை செய்யும் மசாலா காபியை குடிப்பதை வழக்கத்தில் கொள்வோம்..
தேவையான பொருட்கள்..
1.சுக்கு – 50 கிராம்
2.திப்பிலி. 50 கிராம்
3.மிளகு 50 கிராம்
4.கொத்தமல்லி. 50 கிராம்
5.சீரகம் 50 கிராம்
6.சோம்பு. 50 கிராம்
7.ஏலக்காய் தேவையான அளவு
செய்முறை முறை :
மேலே சொன்ன பொருட்களை எல்லாம் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும் பின்பு தேவைப்படும்போதெல்லாம், 1 டம்ளர் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் மசாலா காபி பொடியுடன் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துப் போட்டு கொதிக்க வைக்கவும் .
இப்போது சூடான ‘மசாலா காபி தயார் .
மசாலா காபி நமக்கு தரும் பலன்கள்
நெஞ்சு சளியை நீக்கும், உடலுக்கு புத்துணர்வு தரும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும். சுவாசத்தை சீராக்கும். உடலின் பித்த அளவினை சரி செய்யும் .