ரத்த விருத்திக்கு ஆட்டு ரத்தப்பொரியல் சாப்பிடுங்க…

By Staff

Published:

அசைவப்பிரியர்களுக்கு ஆடு ரத்தத்திலான பொரியல் சாப்பிட ரொம்ப பிடிக்கும். எல்லாரும் ரத்தப்பொரியல் செய்வது சிரமம் என வீட்டில் செய்வதில்லை. ஆனா, ரொம்ப ஈசியாய் செய்துடலாம் இந்த பொரியலை..

a5d2c0cda374df80923d352c057f3d25

தேவையான பொருட்கள்…

ஆட்டு ரத்தம் – ஒரு கப்
சி – வெங்காயம் – 1/4 கிலோ
தேங்காய் – ஒரு மூடி துருவியது
இஞ்சி பூண்டு – 2 பல் – நசுக்கியது
சீரகம். சோம்பு, கடுகு – கொஞ்சம்
ப.மிளகாய் –  4
உப்பு  – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு 
கொ.மல்லி, புதினா, கறிவேப்பிலை – தேவையான அளவு  

11e70be1715ee3923a7bf443cfc14416

செய்முறை :
உறைந்து கட்டிப்போல இருக்கும் ஆட்டு ரத்தத்தினை, நீர் ஊற்றி  கழுவி, ஆட்டு முடி எதாவது இருந்தால் நீக்கி, நீரினை வடித்து ரத்தத்தினை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். ஆட்டு ரத்தக்கட்டி இருக்க கூடாது.

3534b59d57d3716c9ebecec8c631c126

பின்னர் வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, சீரகம், சோம்பு, போட்டு தாளிக்க வேண்டும்.கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.நசுக்கிய பூண்டு பற்கள், சிறிது இஞ்சி தட்டி போட்டு வதக்க வேண்டும்.நன்கு வதங்கிய உடன் அதில் பிசைந்து வைத்துள்ள ரத்தத்தை ஊற்றி நன்கு கிளறவும். அடிப்பிடிக்காமல் கிளற வேண்டும்.

2205545f06f9cdd7fc56936a5cc9c061

ஆடு அறுக்கும்போதே உப்பு போட்டு தான் பாத்திரத்தில் பிடிப்பார்கள்.அதனால் உப்பு போட தேவையில்லை.உப்பு தேவைப்படின் சேர்த்துக்கொள்ளலாம்.ரத்தம் அதன் நிறம் மாறி தண்ணீர் வற்றி நன்கு உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவும்.நன்கு உதிரியாக ஆனவுடன் தேங்காய் துருவல் போட்டு கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும். மேலே கொத்தமல்லி புதினா இலைகளை போட்டு பரிமாறவும்.

ஆட்டு ரத்தத்தினை இப்படி பொரியல் செய்து சாப்பிடுவதால் ரத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பிரசவிச்சிருக்கும் தாய்மார்களுக்கு இதை கொடுப்பதால் அதிகப்படியான ரத்தப்போக்கினை தடுக்கலாம்..

Leave a Comment