8,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை வெற்றி.. இந்தியாவில் இருந்து கொண்டே சீனாவை தாக்கலாம்.. ஒலியை விட வேகமாக செல்லும் ஆகாஷ் ஏவுகணை.. இந்தியாவை தாக்க எந்த நாடு முயற்சித்தாலும் கதை கந்தல்தான்.. நிலம், நீர், ஆகாயம் என மூன்று பாதுகாப்பிலும் இந்தியா தன்னிறைவு.. இனிமேல் யாராவது வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்..!

இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக, ஒரே நேரத்தில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை மற்றும் அடுத்த தலைமுறை ஆகாஷ் ஏவுகணை அமைப்பு ஆகிய இரண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளன. இது…

missilee

இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக, ஒரே நேரத்தில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை மற்றும் அடுத்த தலைமுறை ஆகாஷ் ஏவுகணை அமைப்பு ஆகிய இரண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்பு திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

குறிப்பாக, நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, ஐஎன்எஸ் அரிதமன் என்ற இந்தியாவின் இரண்டாவது செயல்பாட்டு நீர்மூழ்கி கப்பலில் இருந்து சோதிக்கப்பட்டது. சுமார் 3,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, கடலில் இந்தியாவின் அணுஆயுத தடுப்பு ஆற்றலை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சோதனையானது அண்டை நாடான சீனாவிற்கு மிக கடுமையான செய்தியை அனுப்பியுள்ளது. அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் சீனா தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தங்களுக்கு இது ஒரு வலுவான பதிலடியாகும். வங்காள விரிகுடா பகுதியில் சீன உளவு கப்பல்கள் இந்திய ஏவுகணை சோதனைகளை கண்காணிக்க முயன்றாலும், இந்தியாவின் மின்னணு போர்முறை தந்திரங்கள் மூலம் அந்த தரவுகள் சிதைக்கப்பட்டு, எதிரி நாடுகளை குழப்பமடையச் செய்துள்ளன. நிலப்பரப்பில் உள்ள ஏவுகணைகளை விட, கடலுக்கு அடியில் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் எங்கு வேண்டுமானாலும் மறைந்து சென்று தாக்கக்கூடியவை என்பதால், இந்தியாவின் பதிலடி தாக்குதல் திறன் இப்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக K-சீரிஸ் ஏவுகணைகளின் உண்மையான வீச்சு என்பது அறிவிக்கப்பட்ட 3,500 கி.மீ தூரத்தை தாண்டி 5,000 கி.மீ வரை கூட இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இது சீனாவின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை கூட எட்டும் திறன் கொண்டது. K5 போன்ற ஏவுகணைகள் 6,000 முதல் 8,000 கி.மீ வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்டவை. இவை பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் MIRV (Multiple Independently Targetable Reentry Vehicle) தொழில்நுட்பத்தை கொண்டவை. இதன் மூலம் நிலம் மற்றும் வான்வழி தாக்குதல்களை விட, கடல்வழி தாக்குதல்கள் இந்தியாவின் பாதுகாப்பு சுவரை மேலும் பலப்படுத்தியுள்ளன.

மறுபுறம், ஆகாஷ் என்.ஜி ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இது முந்தைய ஆகாஷ் ஏவுகணைகளை விட இரண்டு மடங்கு கூடுதல் வீச்சு கொண்டதோடு , ஒலியை விட 2.5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. இதன் எடை சுமார் 20% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளது, இது ஏவுகணையின் வேகத்தையும் சுறுசுறுப்பையும் அதிகரித்துள்ளது. மிக முக்கியமாக, இது ‘சீ ஸ்கிம்மிங்’ (Sea-skimming) எனப்படும் கடல் மட்டத்திற்கு மிக அருகில் பறந்து வரும் இலக்குகளையும், அதிவேகத்தில் திசை மாறும் எதிரி விமானங்களையும் துல்லியமாக தாக்கும் திறன் பெற்றது.

ஆகாஷ் என்.ஜி ஏவுகணையில் உள்ள ராஜேந்திரா என்.ஜி ரேடார் அமைப்பு, ஒரே நேரத்தில் பல இலக்குகளை கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள ஆக்டிவ் ஆர்.எஃப் சீக்கர் தொழில்நுட்பம், தரைக்கட்டுப்பாட்டுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும் ஏவுகணையே தானாக இலக்கை தேடி சென்று அழிக்கும் வல்லமையை வழங்குகிறது. இது Jamming மின்னணு தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படக்கூடியது. எதிரியின் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை எதிர்கொள்வதில் இது ஒரு சிறந்த ‘ஏரியா டினைல்’ ஆயுதமாக திகழும்.

இந்த இரண்டு சோதனைகளும் வெறும் வழக்கமான சோதனைகள் அல்ல; இவை இந்தியாவின் ‘அணுஆயுத மும்முனை’ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஒரு செயல்விளக்கமாகும். டிஆர்டிஓ மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் இந்த சாதனை, இந்தியா இனி யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை காட்டுகிறது. நிலம், நீர், ஆகாயம் என மூன்றிலும் இந்தியா இப்போது தன்னிறைவு பெற்ற பாதுகாப்பு வளையத்தை கொண்டுள்ளது. இது நாட்டின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு, எதிர்கால போர்க்களங்களில் இந்தியாவின் ஆதிக்கத்தை உறுதி செய்யும் ஒரு முக்கிய நகர்வாகும்.