குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலி. குதிரைவாலி கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் அடங்கி உள்ளன. குதிரைவாலி அரிசியை தொடர்ந்து சாப்பிட்டுவர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும். நூறு கிராம் குதிரைவாலியில் புரத சத்து 6.2கிராம், கொழுப்பு சத்து 2.2 கிராம், தாது உப்புகள் 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் அடங்கி உள்ளது.
தேவையான பொருட்கள்…
குதிரைவாலி அரிசி 1 கப்
பாசிப்பருப்பு 1/2 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
நெய் 2 1/2 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
இஞ்சி நசுக்கியது..
செய்முறை
குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைத்து கொள்ளவும். ஒரு அகன்ற கடினமான பாத்திரத்துல 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் கழுவிய பாசிபருப்பை சேர்த்து மசிய வேக வைத்து கொள்ளவும்.
பிறகு அதில் கழுவி வைத்துள்ள குதிரைவாலி அரிசியை சேர்த்து, தேவையான அளவு நீர், உப்பு சேர்த்து சிறுதீயில் நன்றாக வேகவைக்க வேண்டும். .
குதிரைவாலி அரிசி குழைய வெந்ததும், ஒரு வாணலியில் நெய்,எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி நன்றாய் கிளறி பரிமாறவும்.