விஜய்யால் திமுக, அதிமுக தோற்கிறதோ இல்லையோ, அரசியல் கட்சி கடையை மூடப்போவது சீமான் தான்.. 15 வருடங்கள் சீமான் கட்டிக்காத்த இளைஞர்களின் ஓட்டை ஒரே வருடத்தில் அபகரிக்கிறார் விஜய்.. இனி சீமான் மட்டுமல்ல, சின்ன கட்சிகள் யாரும் அரசியல் செய்ய முடியாது.. 2031 தேர்தல் திமுக, அதிமுக, தவெக தான்..!

நடிகர் விஜயின் அரசியல் வருகையால் அதிமுக, திமுக தனது அரசியல் நிலைப்பாட்டில் அதிர்ச்சியடைந்ததோ இல்லையோ, நாம் தமிழர் கட்சி அன்றாடம் ஒரு விமர்சன வீடியோவை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக்…

vijay vs seeman

நடிகர் விஜயின் அரசியல் வருகையால் அதிமுக, திமுக தனது அரசியல் நிலைப்பாட்டில் அதிர்ச்சியடைந்ததோ இல்லையோ, நாம் தமிழர் கட்சி அன்றாடம் ஒரு விமர்சன வீடியோவை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவுடன், அவரை ‘வாடகை வாயன் நாஞ்சில் சம்பத்’ என்று சாட்டை துரைமுருகன் வெளிப்படையாக விமர்சிப்பதாகவும், ‘செங்கோட்டையன் யோக்கியனா?’ என்று கேள்வி எழுப்பி வீடியோக்கள் வெளியிடுவதையும் பார்க்க முடிகிறது.

விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் தமிழக அரசியல் களத்தில் அனாதையாக போவது சீமானும், நாம் தமிழர் கட்சியும்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசியல் விமர்சகர் பிஸ்மி உறுதியாக கூறுகிறார். தாங்கள் 36 லட்சம் வாக்குகளை பெற்றதாக முஷ்டியை மடக்கும் சீமான், இனிமேல் ஐந்து அல்லது ஆறு லட்சம் வாக்குகளை கூட வாங்க முடியாது என்ற எதார்த்தத்தை நாம் தமிழர் கட்சி ஓரளவுக்கு கணித்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரமே இத்தகைய மோசமான விமர்சனங்களாக வெளிப்படுவதாகவும் அவர் கருதுகிறார்.

நாஞ்சில் சம்பத் போன்ற ஒருவரை இன்னோவா சம்பத் என்று கிண்டல் செய்வதையும் பிஸ்மி கடுமையாக விமர்சித்தார். தமிழக அரசியல்வாதிகளில் ஒரு சாதாரண கவுன்சிலர் கூட பத்து இன்னோவா கார்களை வைத்திருக்கும் நிலையில், அரசியலில் எந்த சொகுசும் சம்பாதிக்காத நாஞ்சில் சம்பத் போன்ற ஒரு அரசியல்வாதியை, ஒரு கட்சி கொடுத்த காரை பயன்படுத்தியதற்காக கரை படிந்த அரசியல்வாதியாக முத்திரை குத்துவது எவ்வளவு கேவலம் என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், பொதுவாழ்வில் அவர் எவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்பதற்கான உதாரணமாக, அவர் டீக்கடையில் நடந்து சென்று டீ குடித்த சம்பவத்தையும் பிஸ்மி பகிர்ந்துகொண்டார்.

நாஞ்சில் சம்பத்தின் வருகை தமிழக வெற்றி கழகத்திற்கு பெரிய பிளஸ் என்றும், ராஜ்மோகனை தவிர வேறு பெரிய பேச்சாளர்கள் இல்லாத அக்கட்சிக்கு அவர் கிடைத்திருப்பது ஒரு மிகப்பெரிய கொடை என்றும் பிஸ்மி குறிப்பிட்டார். நாஞ்சில் சம்பத் கூட்டங்களில் பேச ஆரம்பித்தால் அது கூடுதல் வாக்குகளை கொடுக்கும் என்றும், குறிப்பாக சீமானை அறுத்து தொங்க விடுவதில் அவர் சரியான ஆள் என்பதால், இந்த வெறுப்புணர்ச்சியில் தான் நாம் தமிழர் கட்சியினர் அவரை விமர்சிப்பதாகவும் பிஷ்மி தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் இன்று ஒரு கட்சியில் இருந்து மற்றொன்றிற்கு செல்வதும், முன்னர் எதிர்க்கட்சியைத் திட்டுவதும், பின்னர் அக்கட்சியிலேயே சேருவதும் அரசியலில் சாதாரணமான ஒன்றுதான் என்றும், நாஞ்சில் சம்பத்தின் பழைய பேச்சுக்களை வேதவாக்காக எடுக்க தேவையில்லை என்றும் அவர் வாதிட்டார்.

தவெகவில் வைத்தியலிங்கம் போன்ற பல பிரபலங்கள் சேர போகிறார்கள் என்ற தகவல்கள் உண்மைதான் என்று பிஸ்மி உறுதிப்படுத்தினார். அதிமுக மற்றும் திமுகவிலிருந்தும் கூட பலர் வருவார்கள். ஆனால், வருகிற எல்லாரையும் கட்சியில் இணைக்க கூடாது என்றும், அவர்களின் ட்ராக் ரெக்கார்டு மற்றும் பொது வாழ்வில் எப்படிப்பட்டவர்கள் என்பதை அலசி ஆராய்ந்துதான் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும், பதவிகளும் அந்த அடிப்படையில் தான் கொடுக்க வேண்டும் என்றும் விஜய் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அதனால்தான் நிறைய விண்ணப்பங்கள் வந்தாலும், விஜய் அனைத்தையும் ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், டிசம்பர் 18 ஆம் தேதி ஈரோட்டில் 25,000 பேரை திரட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தை, செங்கோட்டையனின் மேற்பார்வையில் நடத்திவிட முடியும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். கரூர் சம்பவத்தை பயன்படுத்தி திமுக மற்றும் காவல்துறை விஜய்யின் அரசியல் பயணத்தை தடுக்க முயல்வதாகவும், 84 நிபந்தனைகளை விதித்து கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனால்தான் விஜய், எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பாண்டிச்சேரியில் கூட்டம் நடத்தி முடித்து, ‘உங்களை போல் பாண்டிச்சேரி காவல்துறை பயப்படவில்லை’ என்று தமிழக அரசை கேட்டு கொள்வதற்கு இந்த சம்பவத்தை பயன்படுத்தி கொண்டதாகவும் பிஸ்மி விளக்கினார்.