சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வீட்டு வைத்தியம்!

By Staff

Published:

சர்க்கரை நோயாளிகள் அன்றாடமும் உடல்நல பிரச்சனைகளோடு போராட வேண்டி வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தாமல் விட்டாலோ அல்லது கவனிக்காமல் விட்டாலோ கண் தெரியாமை, சிறுநீரக நோய், இரத்த குழாய் பாதிப்பு, தொற்று, இதய நோய், நரம்பு பாதிப்பு, அதிக இரத்த கொதிப்பு, வாதம், மூட்டு ஊனம் மற்றும் கோமா போன்றவைகள் ஏற்படும்.

48544aa58833617eb9cf7c27377157f0

உங்களுக்காக, உங்கள் சர்க்கரை நோய்க்காக நாங்கள் சில வீட்டு சிகிச்சைகளைப் பற்றி கூறுகிறோம். உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடுகளுக்கான உணவு சிகிச்சைகளும் இதில் அடக்கம்.

அனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்குவது சமைக்கப்படாத இயற்கை உணவு தான். இந்த உணவுகளில் அவைகளுக்கென சொந்த என்ஸைம்கள் உள்ளது. இவைகள் ரசாயனத்துடன் நீர்க்கப்படுவதில்லை. முளைத்த பயறு, பழங்கள், பழச்சாறுகள், நட்ஸ் போன்றவைகளை அப்படியே பச்சையாக உண்ணலாம்.

நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உண்ணும் போது நம் உடலில் சர்க்கரை மெதுவாக உறிஞ்சப்படுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் சமநிலையுடன் விளங்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிலை நிறுத்தும் வேலையை திறம்பட செய்யும் கரைகின்ற வகையிலான நார்ச்சத்து. ஆப்பிள், ஆப்ரிகாட், பீட்ரூட், பெர்ரி, கேரட், சிட்ரஸ் பழங்கள், முள்ளங்கி வகை கிழங்கு போன்ற சில பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரைகின்ற நார்ச்சத்து வளமையாக உள்ளது. சர்க்கரை நோய் உள்ள பலரும் அவதிப்பட்டு வரும் எல்.டி.எல். கொலஸ்ட்ரால் உயர்வை குறைக்கவும் கூட கரைகின்ற நார்ச்சத்து உதவுகிறது.

தியானம் செய்வதால் நம் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு குறையும். கார்டிசோல், அட்ரினாலின் மற்றும் நோராட்ரினலின் போன்ற சில மன அழுத்த ஹார்மோன்கள் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவுகளின் உற்பத்தியை தீவிரப்படுத்தும். ட்ரான்ஸ்சென்டென்ட்டல் தியான முறை மூலமாக நரம்பியல் ஹார்மோன்களை குறைத்தால், இரத்தத்தில் உள்ள இன்சுலின் மற்றும் க்ளுகோஸின் அளவு சமநிலையுடன் விளங்கும். மெட்டபாலிக் சிண்ட்ரோம் மற்றும் சர்க்கரை நோயை நடுநிலையாக்க இது உதவும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க துளசி இலை உதவுகிறது. துளசி இலையில் விஷத்தன்மையுள்ள அழுத்தத்தை போக்கும் ஆற்றல்மிக்க ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது. இந்த அழுத்தம் தான் சர்க்கரை நோயில் பல சிக்கல்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும். குறிப்பாக ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால் உணவிற்குப் பிற்பட்ட சர்க்கரை அளவு 28 சதவீதமாக குறையும்.

Leave a Comment