அமெரிக்கப் பொருளாதாரம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், Gen Z தலைமுறை நுகர்வோர் மத்தியில் ஒரு புதிய போக்கு உருவாகியுள்ளது. ஜனநாயகக் கட்சியினர் ஆடம்பர செலவுகள் குறித்து பேசினாலும், இளைய அமெரிக்கர்கள் அதை நம்புவதாக தெரியவில்லை. சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று, இந்த பண்டிகைக் காலத்தில் Gen Z தங்கள் செலவினங்களை 34% அளவுக்கு குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளது. பொதுவாக Gen X பிரிவினர் தான் ஃபேஷன் மற்றும் சமூக ஊடக போக்குகளை தீர்மானிப்பவர்கள் என்பதால், இந்த செலவுக் குறைப்பு சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
Gen Z செலவை குறைக்க முக்கிய காரணம், அவர்களின் வருமானம் அதிகரிக்காத நிலையில், எல்லாவற்றின் விலையும் உயர்ந்துள்ளது என்பதே. கல்லூரி படிப்பு முடித்த 20 வயதுடையவர்கள், அதிக செலவு செய்யக்கூடிய பிரிவாக இருந்தாலும், அவர்கள் தான் இப்போது அதிக அழுத்தத்தை சந்திக்கின்றனர். புதிதாக பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.8% ஆக உயர்ந்துள்ளது, இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த நிலையாகும். இவர்கள் வாடகை, கல்விக்கடன், மளிகை சாமான் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய தேவைகளின் விலையேற்றம் போன்றவற்றால் சிரமப்படுகின்றனர். குறைந்த சேமிப்பு மற்றும் முதலீட்டு அறிவுடன், அன்றாட வாழ்க்கையை தக்கவைத்து கொள்ளவே அவர்கள் போராடுகிறார்கள்.
மேலோட்டமாக பார்த்தால், ஒட்டுமொத்த பொருளாதாரம் நன்றாக இருப்பது போல் தெரிந்தாலும், சில்லறை விற்பனையின் உண்மை முகம் வேறுவிதமாக உள்ளது. உதாரணமாக, பிளாக் ஃபிரைடே விற்பனை கடந்த ஆண்டை விட 3% அதிகரித்து $18 பில்லியனை தொட்டது. ஆனால், உண்மையில் வாடிக்கையாளர்கள் 2% குறைவான பொருட்களை மட்டுமே வாங்கினர். சராசரியாக பொருட்களின் விலை சுமார் 7% அதிகரித்ததால்தான் மொத்த விற்பனை அதிகரித்து காணப்பட்டது. வருமானம் குறைவாக உள்ளவர்கள் மற்றும் இளம் பணியாளர்கள் மத்தியில் செலவு குறைப்பு என்பது மிகவும் இயல்பான ஒன்றாகும். அதுதான் இப்போது நடக்கிறது.
சில்லறை விற்பனையாளர்கள் இந்த செலவு குறைப்பை உணர்ந்து, அதற்கேற்ப விரைவாக தங்கள் உத்திகளை மாற்றிக் கொள்கின்றனர். Best Buy போன்ற நிறுவனங்கள், இந்த சீசனில் குறைந்த விலையுள்ள பொருட்களை அதிகமாக கையிருப்பு வைத்திருப்பதாக கூறியுள்ளன. இது இளம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவியுள்ளது. அதேபோல், E.l.f. Beauty போன்ற பிராண்டுகள், Gen Z வாங்கும் அளவுக்கு பொருட்களை குறைந்த விலையில் மற்றும் சலுகை விலையில் விற்கின்றன. இதன் மூலம், அவர்கள் Gen Z-க்கு ஏற்ற விலையை கொண்டிருப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
இந்த ஆண்டு, பல இளம் வயதினர் பாரம்பரிய அதிக விலையுள்ள பண்டிகை பரிசுகளை தவிர்த்து, சிக்கனமான பொருட்களை வாங்கி செல்கின்றனர். The RealReal என்ற மறுவிற்பனை தளத்தில், Gen Z மற்றும் மில்லினியல்ஸ் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் மேல் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட ஆடம்பர பொருட்களை பரிசாக வழங்குவது விசித்திரமாக தோன்றியிருக்கலாம். ஆனால், இப்போது அது சாதாரணமாகி வருகிறது. இது Gen Z-ன் நுகர்வோர் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தை காட்டுகிறது.
Gen Z இளைஞர்களின் இந்த மாற்றத்திற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய இளைஞர்களும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரும் இளைஞர்கள் எந்தவித ஆடம்பர செலவு செய்யாமல் தாய் நாட்டுக்கு பணத்தை அனுப்புவது, பங்குச்சந்தையில் முதலீடு செய்வது, சொத்துக்கள் வாங்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். அதனால் திடீரென வேலையிழப்பு ஏற்பட்டாலும் இந்திய இளைஞர்கள் தங்கள் சேமிப்பின் மூலம் கிட்டத்தட்ட ஒரு வருடம் கூட சமாளித்து விடுகின்றனர். ஆனால் அமெரிக்க இளைஞர்கள் வேலையிழந்துவிட்டால் அடுத்த மாதமே செலவுக்கு திண்டாடுகிறார்கள். இந்திய இளைஞர்களின் சேமிப்பு திறன் மற்றும் சிக்கன் செலவுகளை கடைபிடிப்பது தான் சரியானது என அமெரிக்க இளைஞர்கள் தற்போது உணர தொடங்கியுள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
