செங்கோட்டையனை சந்தித்தது உண்மை தான்.. ஒப்புக்கொண்ட திருநாவுக்கரசர்.. தவெகவில் இணைகிறாரா? அல்லது தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கு பேச்சுவார்த்தையா? எதுவாக இருந்தாலும் திராவிட கட்சிகளுக்கு இன்னொரு ஆப்பு தான்.. ஜெயலலிதாவுக்கே சிம்மசொப்பனமாக இருந்த திருநாவுக்கரசர் தவெகவுக்கு வந்தால் என்ன நடக்கும்?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், தற்போது மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வருவது தமிழக அரசியலில்…

sengottaiyan thirunavukarasar

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், தற்போது மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வருவது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகளுக்கும் நம்பிக்கைக்குரியவராக இருந்த, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் அவர்களை செங்கோட்டையன் சந்தித்து பேசிய சம்பவம் இந்த பரபரப்புக்கு முக்கிய காரணமாகும்.

திருநாவுக்கரசர் அவர்கள் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஈரோடு சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக செங்கோட்டையன் அவர்களும் அங்கு ருகை புரிந்தார். அப்போது இருவரும் நேரில் சந்தித்ததுடன், சிறிது நேரம் பேசிக் கொண்டனர். செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு, இவர் ஒரு மூத்த அரசியல் தலைவரைச் சந்தித்தது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கு பிறகு, அரசியல் வட்டாரத்தில் கூட்டணி குறித்த யூகங்கள் மின்னல் வேகத்தில் பரவின. செங்கோட்டையன், திருநாவுக்கரசர் அவர்களிடம் காங்கிரஸ் மற்றும் தவெக இடையேயான கூட்டணிக்குத் தூது அனுப்ப முடியுமா என்று கேட்டதாகவும், இந்த கூட்டணி அமைந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த யூகங்களின் அடிப்படையில், செங்கோட்டையன் அவர்கள், திருநாவுக்கரசர் மூலம் காங்கிரஸ் கட்சியை நோக்கி சென்று, விஜய்யின் கட்சிக்கான கூட்டணி நகர்வுகளுக்கு அடித்தளம் இட்டிருக்கலாம் என்றும் ஊடகங்கள் சந்தேகம் எழுப்பின. மேலும் இந்த சந்திப்பின் மூலம் திருநாவுக்கரசர் தவெகவில் இணைவார் என்ற வதந்திகளும் பரவி வருகின்றன.

இந்த செய்திகள் குறித்து ஊடகங்கள் திருநாவுக்கரசரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, அவர் மறுப்பு தெரிவித்தார். “நாங்கள் சந்தித்து பேசியது உண்மைதான். ஆனால், கூட்டணியை பற்றியோ அல்லது அரசியல் விவகாரங்களை பற்றியோ நாங்கள் பேசவில்லை. பொதுவாக தெரிந்தவர்களை பார்த்தால் நலம் விசாரிப்பது போல, ‘என்ன? நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்டுவிட்டு சென்றோம். இதைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை,” என்று கூறினார்.

இரு பெரும் அரசியல் ஆளுமைகள், அதுவும் தமிழகத்தில் தேர்தல் சூழல் நிலவும்போது சந்தித்தால், அரசியல் பேசாமல் வெறும் நலம் விசாரிப்போடு மட்டும் இருந்திருக்க முடியுமா என்ற கேள்வி அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. செங்கோட்டையன் தரப்பின் கூட்டணி நகர்வும், திருநாவுக்கரசர் போன்ற ஒரு மாபெரும் ஆளுமையின் அரசியல் செயல்பாடும், வரும் நாட்களில் தவெகவின் கூட்டணி குறித்து மேலும் பல விவாதங்களை எழுப்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.