இவங்க எல்லாம் நம்ம கட்சிக்கு வர தயாராக இருக்கிறார்கள்.. 10 பேர் பட்டியல் கொடுத்தாரா செங்கோட்டையன்? விஜய்யின் ரியாக்சன் என்ன? 10 பேரில் பலர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களா? என்னமோ பெருசா நடக்க போவுது.. ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் செங்கோட்டையன்.. இனி அதிரடி தான்..!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக விஜய்யின் கட்சிக்கு, தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளை…

vijay sengottaiyan

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக விஜய்யின் கட்சிக்கு, தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இணைய தயாராக இருப்பதாகவும், குறிப்பாக, அதிமுகவின் அதிருப்தி முகாமில் இருந்து விலகும் முக்கிய பிரமுகர்கள் விஜய்யின் பக்கம் சாய்வதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் விஜய்யை சந்தித்து பேசியதாக பேசியதாகவும், அப்போது அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் 10 முக்கிய பிரமுகர்களின் பட்டியலை வழங்கி இவர்கள் எல்லாம் நம் கட்சிக்கு வர தயாராக இருப்பதாக கூறியதாகவும் வெளியான செய்தி அரசியல் வட்டாரத்தில் தகவல் உலவுகிறது.

செங்கோட்டையன் வழங்கிய பட்டியலில் உள்ளவர்கள் விஜய்யின் புதிய கட்சியில் இணைய தயாராக இருப்பதாகவும், அவர்களுக்கு புதிய கட்சியில் உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் தற்போதுள்ள தலைமையின் மீதுள்ள அதிருப்தி மற்றும் கோஷ்டி பூசல்கள் போன்ற காரணங்களாலேயே இவர்கள் விஜய்யின் பக்கம் இணைய முடிவெடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

செங்கோட்டையன் சமர்ப்பித்ததாக கூறப்படும் அந்த 10 பேர் கொண்ட பட்டியலில், சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கள அனுபவமும் மக்கள் செல்வாக்கும் கொண்ட இத்தகைய மூத்த தலைவர்கள் இணைவது, ஆரம்பத்திலேயே விஜய்யின் புதிய கட்சிக்கு ஒரு பெரிய பலத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனிடமிருந்து இத்தகைய பட்டியல் வந்தபோது, நடிகர் விஜய் மிகவும் நிதானத்துடனும் கவனத்துடனும் பதிலளித்துள்ளார். உடனடியாக எந்த உறுதிமொழியையும் வழங்காமல், இந்த பட்டியலை பற்றி தீவிரமாக யோசிப்பதாகவும், விரைவில் இதுகுறித்து விவாதிக்கலாம் என்றும் விஜய் பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது கட்சியில் ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகள் பாதிக்கப்படாமல் இருக்கவே விஜய் இந்த நிதானமான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் நிலவும் குழப்பமான சூழலை பயன்படுத்தி, முக்கிய தலைவர்களை விஜய்யின் பக்கம் கொண்டுவரும் இந்த நடவடிக்கையை, அரசியல் விமர்சகர்கள் ஒரு அதிரடியான ஆட்டத்தின் ஆரம்பம் என கருதுகின்றனர். வரும் நாட்களில், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மேலும் பல முக்கிய பிரமுகர்கள் விஜய்யின் கட்சியில் இணைவது குறித்த அறிவிப்புகள் வெளிவரலாம் என்றும், இதன் மூலம் தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நிகழ போகிறது என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.