புதுவைக்கு அனுப்பப்படுகிறாரா புஸ்ஸி ஆனந்த்.. அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வரும் பெருங்கூட்டம்.. ஒவ்வொருவருக்கும் ஒரு பதவி.. ஒரு முக்கிய விஐபிக்கு பொதுச்செயலாளர் பதவி? காலியாகிறதா அதிமுக கூடாராம்? எடப்பாடியார் சுதாரிக்காவிட்டால் பெரும் சிக்கல்?

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டு அரசியலில் காலூன்ற தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் அதிமுக பிரமுகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை தன்வசம் ஈர்க்கும் வியூகம் அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக, மூத்த தலைவர் செங்கோட்டையன் த.வெ.க.வில்…

vijay bussy

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டு அரசியலில் காலூன்ற தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் அதிமுக பிரமுகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை தன்வசம் ஈர்க்கும் வியூகம் அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக, மூத்த தலைவர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த பின்னர், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. செங்கோட்டையனின் இந்த நகர்வு, வெறும் கட்சி மாற்றம் என்பதையும் தாண்டி, அதிமுகவின் அடித்தளத்தை பலவீனப்படுத்துவதற்கான ஒரு பெரிய அரசியல் அசைன்மென்ட் என பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த பிறகு, அவரது முதல் அசைன்மென்ட், அதிமுகவிலிருந்து விலகியவர்கள் மற்றும் அதிருப்தியாளர்களை விஜய்யிடம் கொண்டு சேர்ப்பதுதான் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. செங்கோட்டையன் மூலம் த.வெ.க.வுக்கு வரும் ஒவ்வொரு முன்னாள் அதிமுக நிர்வாகிக்கும், அவரது அந்தஸ்துக்கு ஏற்ப தக்கதொரு பொறுப்பு வழங்கப்படும் என்றும், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் போன்றோருக்கு உடனடியாக முக்கிய பொறுப்புகளும், ஒரு விஐபிக்கு பொதுச்செயலாளர் பதவியும் அளிக்கப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

செங்கோட்டையன் வரவால் த.வெ.க.வின் உட்கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, தற்போதைய முக்கிய தலைவரான புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரிக்கு அனுப்பப்படலாம் என்றும், புதுச்சேரி கிளைக்கு அவர் பொதுச்செயலாளர் மற்றும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்றும் பேச்சு நிலவுகிறது. த.வெ.க.வில் விஜய்க்கு அடுத்த நிலையில், அனுபவம் வாய்ந்த செங்கோட்டையனுக்கு அதிக அந்தஸ்து கிடைத்துள்ளது. செங்கோட்டையன் மூலம் இணைக்கப்படும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி, த.வெ.க.வின் அடித்தளத்தை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து மூத்த தலைவர்கள் விலகிச் செல்வது ஈ.பி.எஸ்.ஸின் தலைமைக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. வலிமைமிக்க தலைவர்கள்கூட வெளியேறாமல் பார்த்து கொண்ட ஜெயலலிதாவின் நிலைப்பாட்டோடு ஒப்பிடுகையில், ஈ.பி.எஸ். முக்கிய தலைவர்களை வெளியேற அனுமதிப்பது, அதிமுக கூடாரம் காலியாகும் அபாயத்தை உணர்த்துகிறது. இந்த சதி வலைகளை ஈ.பி.எஸ். உணர்ந்து சுதாரிக்காவிட்டால், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய சேதாரத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.