லோவி நிறுவனத்தின் ஆசிய சக்தி குறியீடு 2025 (Asia Power Index 2025) அறிக்கையில், இந்தியா அதிகாரப்பூர்வமாக ‘முக்கிய சக்தி’ என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் விரிவான தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் ‘நடுத்தர சக்தி’ என்ற இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு உறுதியான பொருளாதார வளர்ச்சி மற்றும் இராணுவ திறனில் அடைந்த முன்னேற்றங்கள் காரணமாக இந்த உயரத்தை எட்டியுள்ளது.
ஆசியாவில் உள்ள நாடுகளின் வளங்கள் மற்றும் செல்வாக்கினை ஆண்டுதோறும் அளவிடும் இந்த குறியீட்டில், 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் ஒட்டுமொத்த சக்தி குறியீடு 100-க்கு 40.0 புள்ளிகளாக உள்ளது. இதுவே ‘முக்கிய சக்தி’ என வகைப்படுத்துவதற்கான காரணம் ஆகும். இதன் மூலம், இந்தியா ஜப்பானை விட அதிக புள்ளிகள் பெற்றுள்ளது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை தொடர்ந்து சுப்பர் பவர்ஸ் வல்லரசுகளாக’ நீடிக்கின்றன.
இந்தியாவின் இந்த முன்னேற்றத்தில் ஒரு முக்கிய காரணி, அதன் இராணுவத் திறனில் ஏற்பட்ட குறிப்பிடத்தகுந்த மேம்பாடு ஆகும். இதில் இந்தியா இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. லோவி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த முன்னேற்றத்திற்கு காரணம், மே 2025 இல் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் நடவடிக்கையில் இந்தியா வெற்றிகரமாகச் செயல்பட்டதே ஆகும். இந்த நடவடிக்கை, இந்தியாவின் பாதுகாப்பு தளத்தில் மதிப்புமிக்க சமீபத்திய போர் அனுபவத்தை சேர்த்ததுடன், அதன் தயார்நிலை மற்றும் செயல்பாட்டு திறனில் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
இந்தியா தனது மேம்பட்ட நிலைக்கு மற்றொரு முக்கிய காரணம், வலுவான பொருளாதார வளர்ச்சியை அளித்துள்ளது. பொருளாதார திறனில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்து, ஜப்பானை பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும், முதன்முறையாக, உள்நாட்டு முதலீட்டிற்கான இரண்டாவது மிக முக்கியமான இடமாக இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளது. இதில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இது, புவிசார் அரசியல் மறுசீரமைப்பு, விநியோக சங்கிலி பல்வகைப்படுத்தல் மற்றும் முதலீட்டுக்கான இலக்காக இந்தியாவின் வலுவான அடிப்படை அம்சங்கள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
மேலும், இந்தியா இந்த குறியீட்டில் மற்ற எந்த அளவீட்டையும் விட மிகப்பெரிய அதிகரிப்பை, அதாவது கலாச்சார செல்வாக்கில் பதிவு செய்துள்ளது. விமான பயண இணைப்பு விரிவடைதல், நேரடி விமான சேவை மற்றும் சுற்றுலா மற்றும் கல்வி மையமாக அதன் வளர்ந்து வரும் கவர்ச்சி ஆகியவற்றால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.
எனினும், இவ்வளவு பெரிய முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், சில காரணங்கள் இந்தியாவின் உயர்வுக்கு தடையாக உள்ளன. அதன் வளங்கள் உயரும் வேகத்தை, நீடித்த செல்வாக்காக மாற்றும் திறனுக்கும் இடையே உள்ள “சக்தி இடைவெளி” குறித்து அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும், இந்தியாவின் பலவீனமான அளவீடாக, பாதுகாப்பு வலையமைப்புகள் உள்ளன; இதில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது. லோவி நிறுவனத்தின் முடிவுப்படி, இந்தியாவின் சக்தி தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், சீனாவின் பிராந்திய ஆதிக்கத்துடன் ஒப்பிடும்போது, இந்தியா இன்னும் பின்னடைவில் தான் இருக்கின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
