மனதில் நினைத்த உடனே ஆசை நிறைவேற வேண்டுமா? வழி இருக்கா? இல்லையா?

ஆசை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? நமக்கு எதைப் பார்த்தாலும் ஆசை வந்து விடுகிறது. ஒரு ஆசையா, 2 ஆசையா அதற்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அதில் ஏதாவது ஒரு சில…

ஆசை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? நமக்கு எதைப் பார்த்தாலும் ஆசை வந்து விடுகிறது. ஒரு ஆசையா, 2 ஆசையா அதற்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அதில் ஏதாவது ஒரு சில ஆசைகள் தான் நிறைவேறுகிறது. அது ஏன்? நமக்கு பொதுவாக நம்மால் நிறைவேற்ற முடியாதவற்றின் மீது தான் அதிக ஆசை வரும். இப்படி இருந்தால் நம் கனவு லட்சியம் நிறைவேறுவது எப்போது? இதற்கு எளிய வழி இதுதான். வாங்க பார்க்கலாம்.

ஆசைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் செயலாக்கத் திட்டமிட வேண்டும். முதலில் எதை எடுத்துக் கொள்ளலாம் என ஆராய்ந்து நிதானமாக அதற்கு மட்டும் திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும். ஒரு சமயத்தில் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்.

நிறைவு செய்ய முடியாத 100 ஆசைக் குப்பைகளை மனதில் சேர்த்து வைத்துக் கொண்டு திணறுவதில் யாருக்கு என்ன லாபம்? மன அமைதி முதலில் போனதும், மனதின் பலம் போகிறது. செயல் திறன் போகிறது. நற்குணங்கள் போகிறது. எரிச்சலும் கோபமும் அடிக்கடி வருகிறது. முகத்தில் தெளிவு போய் சோகம் படிகிறது.

ஆனால், இந்தத் தற்சோதனை வெற்றி அடைந்த பின் பார்த்தால் மனம் கலகலப்பாக இருக்கிறது. நெஞ்சில் தைரியம் வந்துவிட்டது. எதையும் சாதித்துவிடலாம் என்ற உற்சாகம் மிகுந்து இருக்கிறது. மனத்தின் குறுகல் ஒழிந்து விசாலம் வந்துவிட்டதால் பொறுமை, அன்பு என்ற பல நற்குணங்கள் மிகுந்து இருக்கின்றன. எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கிறது.