AIஆல் பாதிக்க முடியாத ஒரு துறை.. இன்னும் எத்தனை AI வசதி வந்தாலும் எங்களை அசைக்க முடியாது.. மனித உணர்வுகளுடன் கூடியது எங்கள் தொழில்.. கெத்து காட்டும் கலைஞர்கள்..!

கட்டிடக்கலை அனைத்து கலை வடிவங்களுக்கும் தாய் போன்றது என்று கட்டிடக்கலை நிபுணர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். மனிதனின் உணர்வுகளையும், பயன்பாட்டு தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் இடங்களையும் கட்டமைப்புகளையும் வடிவமைப்பதே கட்டிடக்கலையின் தலையாய இலக்காகும். தாஜ்மஹால்…

AI technology

கட்டிடக்கலை அனைத்து கலை வடிவங்களுக்கும் தாய் போன்றது என்று கட்டிடக்கலை நிபுணர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். மனிதனின் உணர்வுகளையும், பயன்பாட்டு தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் இடங்களையும் கட்டமைப்புகளையும் வடிவமைப்பதே கட்டிடக்கலையின் தலையாய இலக்காகும். தாஜ்மஹால் போன்ற பழமையான கட்டமைப்புகளில் காணப்படும் கலை மற்றும் தொழில்நுட்ப நுணுக்கங்கள் வியக்க வைக்கின்றன. உதாரணமாக, தாஜ்மஹாலின் குவிமாடத்திற்குள் நுழையும்போது ஒலி எதிரொலிப்பதும், தூண்கள் சற்றே வெளிப்புறமாக சாய்ந்து நிலநடுக்கத்தின் போது கட்டிடத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பதும் அதன் அசாத்தியமான வடிவமைப்பை காட்டுகிறது. கட்டிடக்கலை வல்லுநர்கள், கட்டிடங்களை கலைநயத்துடனும் மற்றும் பயனுள்ள வகையிலும் வடிவமைத்து, அதன் கட்டுமானத்தை கண்காணிக்கின்றனர்.

கட்டிடக்கலை வல்லுநர்கள், தங்கள் பணியை ஒரு மருத்துவர் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதுடன் ஒப்பிடுகின்றனர். ஒரு மருத்துவர் நோயாளியின் தேவையை புரிந்துகொண்டு சிகிச்சை அளிப்பது போல, கட்டிட கலைஞர்கள் கட்டிடங்களின் தேவையை புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள். மேலும், ஒவ்வொரு கட்டமைப்பிலும் ஒரு மனிதத்தன்மை உள்ளது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். கட்டிட கலைஞர்கள், பயனர் அனுபவம் மற்றும் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதற்காக உளவியல் மற்றும் சமூகவியல் பற்றியும் படிக்கிறார்கள். இது வடிவமைப்பில் மனிதனின் உணர்ச்சி மற்றும் பயன்பாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்ய மிக முக்கியமானது.

நவீன மற்றும் வளர்ந்து வரும் கட்டிடக் கலைஞர்கள், செயற்கை நுண்ணறிவை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. செயற்கை நுண்ணறிவுக்கு உணர்ச்சிகள் இல்லை. மனித இருப்புக்கு உணர்ச்சி மிகவும் முக்கியமானது, என்பதால், AI ஒரு கட்டிடத்தை பிரதிபலிக்க முடியுமே தவிர, மனிதனின் உணர்வுபூர்வமான ரிசல்ட்டை வழங்க முடியாது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். கட்டிடக்கலை என்பது கவிதை மற்றும் கதை சொல்லுதல் போன்றது. இதில் ஒரு வடிவமைப்பாளரின் அனுபவம் மற்றும் தனிப்பட்ட உணர்வு வெளிப்படும். AI ஒரு கட்டத்தில் முடிவுகளை அளித்தாலும், AI ஒரு சிறந்த உதவி கருவியாக இருக்க முடியுமே தவிர, அது ஒரு உருவாக்கும் கருவியாக இருக்க முடியாது” என்று கட்டிடகலை நிபுணர்கள் நம்புகின்றனர். ஏனெனில், மனிதர்கள் போல படிப்படியாக ஒரு விஷயத்தை செம்மைப்படுத்த AI-ஆல் முடியாது.

ஒரு சிறந்த கட்டிட கலைஞராக ஆக பல திறன்கள் அவசியம். அவற்றில், இடத்தின் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கட்டமைப்பது பற்றிய புரிதல் முக்கியமானது. மேலும், மக்கள் ஒரு கட்டிடத்திற்குள் நுழையும்போது பெறும் உணர்வு ரீதியான மதிப்பு மற்றும் பயனர் அனுபவம் ஆகியவற்றை கட்டிடத்துடன் இணைப்பது இன்றியமையாதது. சரியான காலக்கெடுவுக்கு மத்தியில் பணிகளை நிர்வகிப்பதில் நேர மேலாண்மை மற்றும் பொறுமை அவசியம். மிக முக்கியமாக, வடிவமைப்பாளர்கள் அன்றாட பணிகளில் கூட திருப்தியின்மை என்ற பண்பை கொண்டிருக்கிறார்கள். அதாவது, எப்போதுமே பரிபூரணத்திற்கான ஒரு வாய்ப்பு உள்ளது என்று கருதுகிறார்கள்.

கட்டமைப்பு வடிவமைப்புகளில் விதிகள் படைப்பாற்றலை தடுக்கின்றனவா என்ற கேள்விக்கு,”விதிமுறைகள் படைப்பாற்றலை தடுக்க வேண்டியதில்லை. படைப்பாற்றல் குறைவாக உள்ளவர்களையே விதிமுறைகள் தடுக்கின்றன என்று நிபுணர்கள் பதிலளிக்கின்றனர். மிகவும் அதிகமான தனித்துவம் ஒரு இடத்தின் கூட்டு அடையாளத்திற்கு நல்லதல்ல என்று வலியுறுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிரீஸ் நாட்டின் தெருக்கள் அனைத்தும் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருப்பது அந்த நகரத்தின் அடையாளமாக மாறுவது போல, ஒரு நகரத்தின் தனித்தன்மைக்கு பொதுவான விதிகள் அவசியம். எனவே, ஒவ்வொரு விதிமுறைக்கும் ஒரு நியாயம் இருக்க வேண்டும்.

மொத்தத்தில் கட்டிடக்கலை என்பது ஒரு மனிதனின் உணர்வுபூர்வமான கலை. ஒரு சிறிய வீடு கட்டவோ, ஒரு அபார்ட்மெண்ட் கட்டவோ வேண்டுமானால் AI உதவியால் எளிதாக பிளான் வரைபடம் உருவாக்க முடியும். ஆனால் கலை அம்சத்துடன் ஒரு கட்டிடம் கட்ட AIஆல் நிச்சயம் முடியாது. எனவே AIஆல் கட்டிடக்கலை பாதிக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என கட்டிடக்கலை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.