செங்கோட்டையனை தவெகவுக்கு அனுப்பியதே அமித்ஷாவா? தவெகவை என்.டி.ஏ கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்று ரகசிய அசைன்மென்ட்? எடப்பாடி இல்லாத அதிமுக தான் அமித்ஷாவின் திட்டமா? எடப்பாடியை வெளியேற்றிவிட்டால் தவெக, ஓபிஎஸ், டிடிவி, சசிகலா உள்ளே வரும்.. இந்த டாஸ்க் தான் செங்கோட்டையனிடம் கொடுக்கப்பட்டதா? அப்படியெனில் முதல்வர் வேட்பாளர் விஜய்யா? அமித்ஷாவின் வேற லெவல் பிளானா?

தமிழக வெற்றி கழகத்தில் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையன் இணைந்ததன் பின்னணியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒரு ரகசிய அரசியல் வியூகம் இருக்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகின்றன.…

amitshah sengottaiyan

தமிழக வெற்றி கழகத்தில் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையன் இணைந்ததன் பின்னணியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒரு ரகசிய அரசியல் வியூகம் இருக்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகின்றன. செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று அமித்ஷாவைச் சந்தித்த பின்னர், தி.மு.க.வின் பெரிய சலுகைகளைக்கூட நிராகரித்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தது, இது ஏதோவொரு தேசிய அரசியல் சதுரங்கத்தின் ஒரு பகுதியோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அ.தி.மு.க.வின் தலைமை மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், பா.ஜ.க.வில் இணைவது குறித்து பேச டெல்லி சென்றபோது, அமித்ஷா ஒரு அதிர்ச்சியான முடிவை அவருக்கு முன்வைத்ததாக கூறப்படுகிறது. அமித்ஷாவின் அறிவுரைப்படி, செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் சேர வேண்டாம் என்றும், மாறாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு ஓர் அரசியல் ஆலோசகராக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டாராம். இதன் ரகசிய நோக்கம், செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மூலம் விஜய்க்கு தேசிய அரசியலின் தேவையை உணர்த்தி, மெதுவாக அவரது த.வெ.க.வை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வருவதுதான் என்று நம்பப்படுகிறது.

அமித்ஷாவின் அரசியல் திட்டம் தமிழ்நாட்டில் வலுவான ஒரு வலுவான கூட்டணியை அமைப்பது. ஆனால், அதற்கு கட்சியின் இப்போதைய தலைவரான எடப்பாடி பழனிசாமி தடையாக இருக்கிறார் என்று டெல்லி கருதுவதாக தெரிகிறது. அமித்ஷாவின் உண்மையான கனவு, அ.தி.மு.க. மைனஸ் எடப்பாடி என்ற நிலையை கொண்டு வந்து, ஈ.பி.எஸ். தலைமைக்கு எதிராக நிற்கும் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வின் கீழ் கொண்டு வந்து, ஒரு ஒருங்கிணைந்த வலுவான என்.டி.ஏ. கூட்டணியை உருவாக்குவதுதான். ஈ.பி.எஸ். தலைமையில் அவர்கள் அனைவரும் சேர மாட்டார்கள் என்பதால், அவரை விலக்கி வைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய அம்சம்.

சமீபத்திய கருத்துக் கணிப்புகள் விஜய்க்கு 15% முதல் 20% வரை வாக்கு வங்கி இருப்பதாக காட்டுவதால், த.வெ.க.வின் இந்த வாக்கு வங்கி, அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியுடன் இணைந்தால், தி.மு.க.வை எளிதாக வீழ்த்த முடியும் என்று அமித்ஷா நம்புகிறார். இந்த மெகா கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழும்போது, செங்கோட்டையன் மூலம் விஜய்க்கு, “நீங்கள் என்.டி.ஏ.வில் இணைந்தால், அதிகபட்ச வாக்குகள் யாருக்கு கிடைக்கிறதோ, யாருக்கு அதிக தொகுதிகளில் வெற்றி கிடைக்கிறதோ அவர்களை முதல்வர் வேட்பாளராக்கலாம்” என்ற உறுதிமொழியையும் டெல்லி அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் அபரிமிதமான செல்வாக்கை கருத்தில் கொண்டால், அவர் முதல்வர் வேட்பாளராக வர வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றால் அதிமுகவில் உள்ள ஒரு பிரபல முதல்வராகலாம்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியை சாதாரணமாக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றுவது கடினம். அவரது முழு கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது. ஒரு கட்சியின் பொதுச்செயலாளரையே கட்சியில் இருந்து நீக்குவதோ அல்லது ஓரம் கட்டப்படுவதோ அவ்வளவு எளிது அல்ல. ஈபிஎஸ் தனது கட்சி பதவியை காப்பாற்றி கொள்ள எந்த லெவலுக்கும் போவார். எனவே அமித்ஷாவின் இந்த திட்டம் எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.