செங்கோட்டையன் வந்தாச்சு.. மேற்கு மண்டலமும் தவெகவுக்கு வந்தாச்சு.. இனி ஓபிஎஸ், டிடிவி தினகரனும் வந்துவிட்டால் தெற்கு மண்டலமும் வந்துரும்.. பாமக, தேமுதிக வந்துவிட்டால் வடக்கு மண்டலமும் வந்துவிடும்.. முதல்முறையாக திராவிட கட்சிகள் இல்லாத கூட்டணி அரசா? ஒரே தேர்தலில் 2 திராவிட கட்சிகளும் வீழ்த்தப்படுகிறதா?

அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும் கொங்கு மண்டலத்தின் முக்கிய ஆளுமையுமான கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணைவு, விஜய்யின் தேர்தல் வியூகத்தில்…

tvk alliance

அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும் கொங்கு மண்டலத்தின் முக்கிய ஆளுமையுமான கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணைவு, விஜய்யின் தேர்தல் வியூகத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையனின் வருகையால் மேற்கு மண்டல அரசியல் பலமடைந்திருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக மற்ற மண்டலங்களையும் கைப்பற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கும் நிலையில், சுமார் ஐம்பதாண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனின் வருகை, த.வெ.க.வின் இளையோர் பட்டாளத்திற்கு ஒரு பலமான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது.

வெறும் ரசிகர் மன்றமாக இருந்த த.வெ.க., இவரை உள்வாங்குவதன் மூலம் ஒரு பலமான அரசியல் கட்சிக்கு தேவையான அமைப்பு ரீதியான கட்டமைப்பை வேகமாக உருவாக்க முடியும். மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வை பலகீனப்படுத்தி, த.வெ.க.வின் இருப்பை பலப்படுத்த செங்கோட்டையனின் இந்த நகர்வு உறுதுணையாக இருக்கும்.

மேற்கு மண்டலத்தை பலப்படுத்திய நிலையில், விஜய்யின் அடுத்த இலக்கு தென் மண்டலமாக இருக்கலாம். தென் தமிழகத்தில் கணிசமான செல்வாக்கை கொண்டுள்ள ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் போன்றோரை த.வெ.க. கூட்டணிக்குள் கொண்டுவர தீவிரம் காட்டப்படலாம்.

முக்குலத்தோர் சமூக வாக்குகளை பெரும் அளவில் கொண்ட இவர்கள் இணைந்தால், தென் மாவட்டங்களில் ஒரு வலுவான சமூக சமன்பாட்டை உருவாக்கி, அ.தி.மு.க.வுக்கு எதிராக வாக்குகளை பிரிக்க வியூகங்கள் வகுக்கப்படலாம்.

அடுத்து, தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மண்டல பகுதிகளின் வாக்குகளை குறிவைத்து, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை த.வெ.க. கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். பா.ம.க.வின் வன்னியர் வாக்கு வங்கியும், தே.மு.தி.க.வின் ஆதரவாளர்களும் இணையும்போது, வடக்கு மண்டல வாக்குகளை திரட்டுவது சுலபமாகும். இந்த கூட்டணி சாத்தியமானால், தமிழகத்தின் நான்கு முக்கிய மண்டலங்களிலும் திராவிட கட்சிகளுக்கு எதிராக ஒரு வலுவான மாற்று உருவாகும்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. பல கூறுகளாக பிளவுபட்டுள்ள நிலையில், செங்கோட்டையன், ஓ.பி.எஸ்., தினகரன் போன்ற மூத்த தலைவர்கள் எதிரணியில் இணைவது, அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை நேரடியாகப் பாதிக்கும்.
த.வெ.க. கூட்டணி வலுப்பெறும்போது, தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் இந்த மாற்று அணிக்கு குவிய வாய்ப்புள்ளது. இதன் மூலம், தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு ‘திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டணி ஆட்சி’ அமைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகலாம்.

விஜய், நடிகர் என்ற பிம்பத்திலிருந்து விலகி, மண்டலவாரியான பலம் கொண்ட மூத்த தலைவர்களையும் கட்சிகளையும் தன் பக்கம் இழுத்து, ஒரு பலமான கூட்டணி அமைப்பாளராக உருவெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

செங்கோட்டையனின் இணைவு இந்த வியூகத்தின் ஒரு தொடக்கமே. 2026 சட்டமன்ற தேர்தலில், இரு திராவிடக் கட்சிகளும் ஒரே நேரத்தில் வீழ்த்தப்பட்டு, ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கப்படுமா என்பது, இனி வரும் வாரங்களில் கூட்டணியில் இணையும் கட்சிகளின் நகர்வுகளை பொறுத்தே அமையும்.