இந்தியா இனி எங்களுக்கு தேவையில்லை.. சீனா வேண்டுமளவுக்கு எங்களுக்கு கைகொடுத்துவிட்டது.. அமெரிக்க அதிபர் டிரம்ப்.. ஆனால் சீனா எப்போது வேண்டுமானாலும் காலை வாரி விடும்.. இந்தியா தான் நம்பகமான கூட்டாளி.. டிரம்புக்கு எச்சரிக்கை விடுக்கும் பொருளாதார நிபுணர்கள்.. ஆனால் டிரம்ப் யார் பேச்சையும் கேட்க மாட்டாரே..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் மற்றும் அதன் விளைவாக அமெரிக்க விவசாயத் துறைக்கு ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்கள் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.…

america china

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் மற்றும் அதன் விளைவாக அமெரிக்க விவசாயத் துறைக்கு ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்கள் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். சீனாவிடம் அமெரிக்க விவசாய பொருட்களின் கொள்முதல் வேகத்தையும் அளவையும் அதிகரிக்குமாறு தாம் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்குச் சீன தரப்பு ஏறக்குறைய ஒப்புக்கொண்டது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வந்த தீவிரமான வர்த்தக போர் காரணமாக, சீனா அமெரிக்காவின் விவசாய பொருட்களை, குறிப்பாக சோயாபீன்ஸ் வாங்குவதை முற்றிலும் நிறுத்தியது. இதனால், அமெரிக்காவின் விவசாயத்துறை வரலாறு காணாத பாதிப்பை எதிர்கொண்டது. விவசாயிகள் உற்பத்தி செய்த சோயாபீன்ஸை விற்க முடியாமல் தவித்த நிலையில், தற்போது மீண்டும் அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்ஸ் கொள்முதல் செய்யச் சீனா ஒப்புக்கொண்டிருப்பது, அமெரிக்க விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியைக்கொடுத்துள்ளது.

இந்த ஒப்புதலை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியதோடு, ஷி ஜின்பிங் விரைவில் இந்த விஷயத்தில் மேம்பட்ட அளவில் உங்களுக்கு ஆச்சரியமளிப்பார் என்றும், இன்னும் அதிகமாக பொருட்களை வாங்குவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சீனா விவசாய பொருட்களை வாங்குவதை நிறுத்தியிருந்த காலகட்டத்தில், அமெரிக்க அரசு இந்தியாவை நோக்கி திரும்பியது. அமெரிக்காவிலிருந்து சோயாபீன்ஸ் உள்ளிட்ட விவசாய பொருட்களை வாங்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. ஆனால், இந்தியா இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது. இதற்கு பின்னால் இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன.

அமெரிக்காவின் சில விவசாய பொருட்கள் மரபு மாற்றம் செய்யப்பட்டவை. மரபு மாற்றம் செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதில் இந்தியாவுக்கு சில கட்டுப்பாடுகளும் கொள்கை ரீதியான தயக்கமும் இருந்தன. மேலும் அமெரிக்காவிலிருந்து சோயாபீன்ஸ் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டால், அது இந்தியாவின் உள்நாட்டு சோயாபீன்ஸ் விவசாயிகளின் நலனை பாதிக்கும் என்று இந்திய அரசு கருதியது. இந்தியாவின் இந்த மறுப்பினால் ஆத்திரமடைந்த அதிபர் டிரம்ப், அப்போது இந்தியா மீது சுமார் 50% வரை இறக்குமதி வரியை விதித்தார்.

தற்போது சீனா கொள்முதல் செய்ய முன்வந்திருக்கும் சூழலில், அதிபர் டிரம்ப் பேசியிருப்பது ஒருவித அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னர் அமெரிக்கா நிர்பந்தித்தபோது, இந்தியா விவசாயப் பொருட்களை வாங்க மறுத்ததால் டிரம்ப் கோபமடைந்தார். ஆனால் இப்போது, “இந்தியா வாங்க வேண்டிய அவசியம் இல்லை; எங்களுக்கு சீனா கை கொடுக்கும்” என்ற தொனியில் அவர் பேசி இருப்பது, வர்த்தகப் போரில் ஒரு பெரிய கூட்டணி மாற்றம் ஏற்பட்டதை குறிக்கிறது. சீன பொருளாதாரம் மீண்டும் அமெரிக்க விவசாயிகளுக்கு சாதகமாக திரும்பியிருப்பதால், இந்தியா போன்ற நாடுகளின் சந்தை இப்போது அமெரிக்காவுக்குத் தற்காலிகமாக முக்கியத்துவம் இழந்துவிட்டதாக கருதப்படுகிறது.

ஆனால் அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் சீனா எந்த நேரமும் காலை வாரிவிடும் என்றும், இந்தியா மட்டுமே நம்பகமான கூட்டாளி நாடு என்றும், எனவே இந்தியாவை சமாதானப்படுத்தி அமெரிக்க விவசாய பொருட்களை வாங்க முயற்சிக்க வேண்டும் என்றும் சீனா எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க விலை பொருட்களை வாங்குவதை நிறுத்தி விடும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் யாருடைய அறிவுரையையும் கேட்காத ட்ரம்ப் இந்த விஷயத்தில் மட்டும் கேட்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.