போனது ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள.. ஆனால் செய்தது வேற லெவல்.. கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தம்.. பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இத்தாலியிடமும் முக்கிய பேச்சுவார்த்தை.. ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்த பிரதமர் மோடி.. கனடாவின் கோபத்தை ஒரே விசிட்டில் தீர்த்து வைத்த மோடி.. இதுதான் ராஜதந்திரமா?

இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் தமது பொருளாதார பங்காளித்துவத்தை மீண்டும் கட்டமைக்க முயற்சிகளை தொடங்கியுள்ளன. இந்த முயற்சி இரு நாடுகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்குவதை…

india canada

இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் தமது பொருளாதார பங்காளித்துவத்தை மீண்டும் கட்டமைக்க முயற்சிகளை தொடங்கியுள்ளன. இந்த முயற்சி இரு நாடுகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்குவதை நோக்கமாக கொண்ட விரிவான பொருளாதார ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது தொடங்கியுள்ளன.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின் ஓரத்தில், கனடா பிரதமர் மார்க் கார்னியும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளார். 2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயர்த்துவது. இது தற்போதைய வர்த்தக அளவை விட மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

2023-ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் உறவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இருப்பினும், கனடா தற்போது இராஜதந்திரத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. கனடா, தெற்காசியாவில் இந்தியா ஒரு பங்குதாரர் என்றும், வேகமான பொருளாதார வளர்ச்சி, அதிக தேவை மற்றும் இளம் மக்கள்தொகை கொண்ட ஒரு நாடு என்றும் கருதுகிறது.

அமெரிக்காவுடனான உறவில், குறிப்பாக ட்ரம்ப்பின் அதிரடி வரிகள் காரணமாக கனடா நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், தனது பாதிப்பை சமநிலைப்படுத்த புதிய நட்பு நாடுகளை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்திய பொருட்கள் மீது ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வரிகளால் இந்தியாவும் அழுத்தத்தில் உள்ளது. 2024-ஆம் ஆண்டில் இந்தியா-கனடா வர்த்தகம் $30 பில்லியனை தாண்டியது. இதன் மூலம், இந்தியா கனடாவின் ஏழாவது பெரிய பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தக பங்காளியாக உயர்ந்தது.

இரு தலைவர்களும் முன்னர் தடைபட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும், விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் சாத்தியமான விரிவாக்கத்தை ஆராய்வதற்கும் ஒப்புக்கொண்டனர்.

மொத்தத்தில் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர்மோடி, அந்த வேலையை மட்டும் முடிக்காமல், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான ஒப்பந்தத்தையும் முடித்து, இந்த விசிட்டின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துவிட்டார். ஏற்கனவே பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா நாடுகளின் தலைவர்களிடமும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.