SIR நடவடிக்கை எதிரொலி: பதறியடித்து வங்கதேசத்திற்கு ஓட்டம் பிடிக்கும் ஊடுருவல்காரர்கள்.. வங்கதேச எல்லையில் குவியும் கூட்டம்.. பலரிடம் போலி ஆதார், வாக்காளர் அட்டை இருப்பதாக தகவல்.. தரகர்களிடம் பணம் கொடுத்து இந்தியாவில் ஊடுருவினோம் என பலர் ஒப்புதல்.. SIR மட்டும் இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்.. SIRஐ எதிர்க்கும் கும்பல் திருந்துமா?

SIR நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக உள்ள வங்கதேச ஊடுருவல்காரர்கள், தாங்கள் அடையாளம் காணப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தில், அவசரமாக எல்லைகளை நோக்கி படையெடுக்கத்…

migrants

SIR நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக உள்ள வங்கதேச ஊடுருவல்காரர்கள், தாங்கள் அடையாளம் காணப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தில், அவசரமாக எல்லைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் உள்ள, மேற்குவங்கத்தின் எல்லையான ஹாகிம்பூர் எல்லை சோதனை சாவடிக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெரும் கூட்டம் தங்கள் உடமைகளுடன் திரண்டு வருகின்றனர். இவர்கள் பகல் வெளிச்சத்திலேயே இந்தியாவை விட்டு வெளியேற முயல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஊடுருவல்காரர்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது SIR செயல்முறை அமலுக்கு வரும்போது, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறாது என்றும், இதனால் தாங்கள் சட்டவிரோதமாக அடையாளம் காணப்படுவோம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

ஏராளமான பைகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் குடும்பங்களுடன் குழுமியிருக்கும் இந்த மக்கள், வங்கதேசத்திற்குள் நுழைய எல்லை பாதுகாப்புப் படையின் க்ரீன் சிக்னலுக்காகவே காத்திருக்கின்றனர்.

வெளியேறும் ஊடுருவல்காரர்கள் தாங்கள் பாஸ்போர்ட் அல்லது விசா மூலம் வரவில்லை என்றும், தரகர்கள் மூலம் பணம் கொடுத்து கொல்கத்தாவுக்குள் நுழைந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். சுமார் 57,000 ரூபாய் கொடுத்து இந்தியாவுக்குள் வந்ததாகவும் தெரிவித்தனர்.

தினசரி, ஹாகிம்பூர் சோதனை சாவடியில் இருந்து சுமார் 200 முதல் 300 பேர் வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இவர்களில் பலரிடம் போலி வாக்காளர் அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகள் இருந்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன.

ஊடுருவல்காரர்கள் தாமாகவே வெளியேறும் இந்த சூழ்நிலையிலும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, SIR நடைமுறைக்கு எதிராக தலைமைத் தேர்தல் ஆணையரை கடுமையாக விமர்சித்துள்ளார். “வங்காளத்தில் SIR நடைமுறைப்படுத்தப்பட்டால், பீகாரில் நடந்ததை போல, இங்குள்ள 40 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் பெயர்களை நீக்கக்கூடும். அப்படி நடந்தால், நாங்கள் முற்றுகை போராட்டம் செய்வோம். நாங்கள் பெயர்களை நீக்க விடமாட்டோம்,” என்று மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

SIR அமல்படுத்தப்பட்டால் வங்காளத்தில் கலவரங்கள் வெடிக்கும் என்று அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். “சட்டம் உங்களுடையது; ஆனால் சட்டம்-ஒழுங்கு என் கையில் உள்ளது. கலவரத்தை யாரும் ஏற்படுத்த மாட்டார்கள், அரசாங்கம் தான் ஏற்படுத்தும்” என்று அவர் கூறியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும், “நாங்கள் பெயரை சேர்க்கவும் விடமாட்டோம், நீக்கவும் விடமாட்டோம்” என்று கூறி, சட்ட ரீதியான ஒரு செயல்முறையை தடுப்பதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

SIR அமலுக்கு வரும் என்ற வெறும் அறிவிப்பிற்கே இவ்வளவு பெரிய மக்கள் வெளியேற்றம் காணப்படுகிறது என்றால், உண்மையில் எவ்வளவு சட்டவிரோத வங்கதேச ஊடுருவல்காரர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.