சாப்பிட சோறு கூட இல்லை.. இந்த லட்சணத்தில் போர் தேவையா? பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை எச்சரிக்கும் பொருளாதார வல்லுனர்கள்.. கடன்களிலேயே காலத்தை ஓட்டும் பாகிஸ்தானுக்கு வீராப்பு தேவையா? இப்ப தான் ஓரளவு ஆப்கன் வளர்ச்சி பாதையில் வருகிறது.. அதையும் போர் செஞ்சு கெடுத்துக்கிடனுமா?

பல ஆண்டு கால மோதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், வழக்கத்திற்கு மாறாக தற்போது தான் ஓரளவுக்கு வருவாய் உயர்வை அடைந்து வருகிறது. அதேபொல் பல ஆண்டுகளாக வெளிநாட்டு உதவிகளைப் பெற்று மட்டுமே பாகிஸ்தான் சமாளித்து…

afghan pak

பல ஆண்டு கால மோதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், வழக்கத்திற்கு மாறாக தற்போது தான் ஓரளவுக்கு வருவாய் உயர்வை அடைந்து வருகிறது. அதேபொல் பல ஆண்டுகளாக வெளிநாட்டு உதவிகளைப் பெற்று மட்டுமே பாகிஸ்தான் சமாளித்து வருகிறது. பாகிஸ்தான் கடுமையான கடன் சுமை, உயர் பணவீக்கம் மற்றும் அரசியல் ஸ்திரமின்மையால் தத்தளிக்கிறது. இரு நாடுகளுமே பொருளாதாரத்தில் சிக்கலில் இருக்கும் நிலையில், போர் செய்தால் மேலும் சிக்கலாகும் என்ற அடிப்படை கூட இல்லாமல் போரிடுவது அந்நாடுகளின் அரசியல்வாதிகளின் முட்டாள்தனத்தை வெளிப்படுத்துவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தென் ஆசியாவிலேயே பலவீனமான நாணயங்களில் ஒன்றாக பாகிஸ்தான் கரன்சி உள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்குச் சுமார் 280 பாகிஸ்தான் ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு அமெரிக்க டாலருக்கு சுமார் 66.6 ஆப்கான் கரன்சி என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளை ஒப்பிடுகையில் உலக வங்கியின் தரவுகளின்படி, ஆப்கானிஸ்தானின் வருவாய் திரட்டல் 11% உயர்ந்து இலக்கை தாண்டியுள்ளதாகக் காட்டுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதிகள் மற்றும் பண அடிப்படையிலான பொருளாதாரம் காரணமாக அங்கு பணவீக்கம் பெரும்பாலும் கட்டுக்குள் உள்ளது. இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தான் தொடர்ச்சியான பணவீக்கம் மற்றும் முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் அரசியல் கொந்தளிப்புடன் போராடி வருகிறது.

மனிதநேய உதவிகள் குறைந்துவிட்ட போதிலும் ஆப்கானிஸ்தான் பொருளாதார ரீதியாக சறுக்கவில்லை; ஆனால் பாகிஸ்தான் உதவிகளை பெற்றும் போராடுகிறது. தலிபான் நிர்வாகத்திற்கு பலதரப்பு நிதி நிறுவனங்களுக்கான அணுகல் இல்லாததால், அந்நாடு மிக குறைந்த வெளிநாட்டு கடனையே கொண்டுள்ளது. மனிதநேய உதவிகள் $3.8 பில்லியனில் இருந்து $1.9 பில்லியனாக குறைந்த போதிலும், பொருளாதாரம் முழுமையான வீழ்ச்சியில் இருந்து தப்பியுள்ளது.

ஆனால் பாகிஸ்தான் கடும் கடன் நெருக்கடியில் உள்ளது. துணை நிதி அமைச்சர் அலி பர்வேஸ் மாலிக் கூற்றுப்படி, பாகிஸ்தான் அடுத்த நான்கு ஆண்டுகளில் $100 பில்லியன் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இது, நாட்டின் இருப்பில் உள்ள $9.4 பில்லியனை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம். மேலும், சீனா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் சுமார் $12 பில்லியன் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை நீட்டித்து உதவியுள்ளன. ஐஎம்எஃப் சுமார் $5 பில்லியன் நிதி இடைவெளியை சுட்டிக்காட்டியுள்ளது. இது பாகிஸ்தானின் மிக கடுமையான கடன் நெருக்கடிகளில் ஒன்றாகும்.

ஆப்கானிஸ்தான் இப்போது பாகிஸ்தானை நம்பியிருப்பதை குறைக்க முயற்சிக்கிறது. மத்திய ஆசியாவுடனான அதன் வர்த்தகம் $1.7 பில்லியனாக வளர்ந்துள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தானுக்கு சரக்குகளை ஏற்றி செல்ல மிக மலிவான மற்றும் விரைவான துறைமுக அணுகலை பாகிஸ்தான் இன்னும் வழங்குகிறது. தொடர்ச்சியான எல்லை மூடல்கள் மற்றும் மோதல்கள் காரணமாக, காபூல் வர்த்தகத்திற்கான மாற்று வழிகளை தீவிரமாகத் தேட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அதிக வரிகள், முடிக்கப்படாத ரயில் இணைப்புகள் மற்றும் சர்வதேச அங்கீகாரம் இல்லாதது போன்ற கட்டமைப்பு சவால்கள் ஆப்கானிஸ்தானின் பெரிய அளவிலான பொருளாதார விரிவாக்கத்திற்கு தடையாக உள்ளன.

இந்தியா போல் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறாத நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் தங்கள் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் போர் மூலம் மோதிக்கொண்டால் இரு நாடுகளும் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும் அல்லது திவாலாகிவிடும் என சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.