பிகாரில் காங்கிரஸ் தோல்வி.. தனித்து போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் தோல்வி.. விஜய் மனதில் மிகப்பெரிய மாற்றம்.. காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம்.. தனித்தும் வேண்டாம்.. என்.டி.ஏ கூட்டணிக்கு செல்கிறாரா விஜய்? 50 தொகுதிகள், துணை முதல்வர், 5 அமைச்சர்கள் கேட்க திட்டமா?

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் நிலைப்பாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தனித்து…

vijay amitshah eps

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் நிலைப்பாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைப்பதா என்ற கேள்வி, தேசிய மற்றும் மாநில அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும், அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அவர்களின் ஜன சூராஜ் கட்சியின் தோல்வியும், விஜய்யின் முடிவுகளில் ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது தலைமையின் கீழ் போட்டியிட்டு, தமிழகத்தில் அடிப்படை அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே தனது கட்சியின் இலட்சியம் என்று உறுதியாக அறிவித்துள்ளார். ஆரம்பக்கட்டத்தில் தனித்து போட்டியிடும் முடிவிலேயே TVK இருந்ததாகக் கருதப்படுகிறது.

ஆனால், பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், ஒரு புதிய கட்சி அல்லது மாற்று சக்தி, வலுவான மாநில மற்றும் தேசியக் கட்சிகளுக்கு எதிராக தனித்து நின்று வெற்றி பெறுவது எவ்வளவு கடினமானது என்பதை உணர்த்தியுள்ளது.

பீகாரில் நீண்ட காலமாக களப்பணியாற்றி, ‘ஜன் சூராஜ்’ இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனித்து போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் கட்சி, தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பிரசாந்த் கிஷோர், தனது தனிப்பட்ட செல்வாக்கையும், வியூக திறமையையும் நம்பி களமிறங்கியபோது அடைந்த தோல்வி, தமிழகத்தில் உள்ள புதிய கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

சினிமா புகழ், சமூக நல பணிகள் ஆகியவற்றின் மூலம் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், தமிழக அரசியலில் ஆழமாக வேரூன்றியுள்ள திராவிடக் கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளின் பலமான கட்டமைப்புக்கு எதிராக தனித்து நின்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மிக குறைவு என்ற யதார்த்தத்தை இது விஜய்க்கு உணர்த்தியிருக்கலாம். இதனால், “தனித்து போட்டியும் வேண்டாம், தோல்வியை சந்திக்கவும் வேண்டாம்” என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.

தனித்து போட்டியிடுவதில் உள்ள சவால்களை உணர்ந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் கூட்டணி குறித்து சிந்திக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் முதன்மையான அரசியல் இலக்கே தி.மு.க. தலைமையிலான ஆட்சிக்கு ஒரு மாற்று உருவாக்குவதுதான். எனவே அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக கிளம்பியுள்ள தகவல்கள், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய ஆளும் கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது, மாநில தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். மேலும், மத்தியில் வலுவான பிணைப்பு இருப்பது, தான் செய்ய விரும்பும் அடிப்படை மாற்றங்களுக்கு பலமாக இருக்கும் என்று விஜய் நம்பலாம்.

தி.மு.க.வை எதிர்க்கும் வலுவான தலைமை இல்லாத நிலையில், பா.ஜ.க.விற்கு விஜய்யின் மக்கள் செல்வாக்கு தமிழகத்தில் தேவைப்படுகிறது. எனவே, விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. தலைமை பல சலுகைகளை வழங்க தயாராக இருக்கலாம்.

என்.டி.ஏ கூட்டணியில் இணைவது உறுதியானால், தமிழக வெற்றி கழகம் தரப்பில் சில ‘மெகா டீல்கள்’ முன்வைக்கப்படலாம் என்று உறுதியான தகவல்கள் இல்லை என்றாலும், அரசியல் வட்டாரங்களில் சில எதிர்பார்ப்புகள் பேசப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகம், அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு செய்தால், குறைந்தபட்சம் 40 முதல் 50 வரையிலான தொகுதிகளை கேட்க வாய்ப்புள்ளது. மேலும் என்.டி.ஏ கூட்டணீ ஆட்சியமைத்தால் துணை முதல்வர் பதவியும், 5 முக்கிய அமைச்சரவை இடங்களை தனது கட்சிக்கு கேட்கவும் வாய்ப்புள்ளது. இது, தனது கட்சியின் கொள்கைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு போதுமான அதிகாரத்தை கொடுக்கும்.

விஜய்யின் இந்த திடீர் முடிவு, 2026 சட்டமன்ற தேர்தலின் போக்கையே மாற்றியமைத்து, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

மேற்கூரிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் அரசியல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்தாலும், விஜய் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை, இந்த விவாதங்கள் தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக வைத்திருக்கும்.