பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து, இந்தியாவின் வெளியுறவு கொள்கையும், தேசிய பாதுகாப்பு கொள்கையும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போன்ற வலிமையான தலைவர்களின் மூலம், இந்தியா சர்வதேச அரங்கில் ஓர் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. உலக நாடுகள் இன்று இந்தியாவை ஓர் அச்சுறுத்தும் போட்டியாளராகவும், அதே சமயம் தவிர்க்க முடியாத பங்காளராகவும் பார்க்கின்றன.
இந்தியாவின் வெளியுறவு கொள்கையை வியக்கத்தக்க வகையில் கையாளுவதில் ஜெய்சங்கரின் பங்கு அசாத்தியமானது. பல தசாப்தங்களாக அவர் பெற்ற அனுபவம் மற்றும் ராஜதந்திர அறிவு ஆகியவை இந்தியாவின் குரலை உலக அரங்கில் அழுத்தமாக ஒலிக்கச் செய்கின்றன.
பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடனான எல்லை பிரச்சினைகள் மற்றும் சர்வதேச அழுத்தங்கள் வரும்போது, ஜெய்சங்கர் எடுக்கும் முடிவுகள் மற்றும் அவர் முன்வைக்கும் வாதங்கள் உலகையே ஆச்சரியப்படுத்துகின்றன. சர்வதேச ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ஜெய்சங்கர் அளிக்கும் பதில்கள், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கின்றன.
அவரது பதில் எப்போதுமே நிதானத்துடனும், கோபப்படாமலும் இருக்கும். ஆனால், அதே நேரத்தில் அவரது வாதங்கள் அழுத்தமாகவும், ஆக்கபூர்வமாகவும் இருக்கும். உதாரணமாக, “எந்த நாட்டின் பிரச்சினை பற்றிப் பேசுவது?” என்று மேற்கத்திய நாடுகளின் பத்திரிகையாளர்கள் கேட்கும்போது, “நீங்கள் ஐரோப்பாவின் பிரச்சினைகளை பற்றிப் பேசுங்கள், இந்தியாவை விட்டுவிடுங்கள்” அல்லது “உங்கள் பிரச்சினைகள் பற்றி பேசுங்கள்” என்று தைரியமாக பதிலளிப்பதை சர்வதேச பத்திரிகையாளர்களே ஆச்சரியத்துடன் ஒப்புக்கொள்கின்றனர்.
இந்த அணுகுமுறை, இந்தியா தனது வெளியுறவு முடிவுகளை யாருடைய கருத்துக்காகவும் மாற்றிக்கொள்ளாது என்பதைக் குறிக்கிறது. உலக நாடுகள் இந்தியாவை பார்த்து அஞ்சுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
ராஜதந்திரம் மற்றும் வெளியுறவுத்துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவரை, பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து, ராஜ்ய சபா சீட் வழங்கி, அவரை வெளியுறவுத் துறை அமைச்சராக உயர்த்திய பெருமை மோடி தலைமையை சேரும். ஒரு சிவில் பணியாளரின் திறமைக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்து பயன்படுத்தப்பட்டதற்கான சிறந்த உதாரணம் இது.
ஜெய்சங்கர் போன்ற அனுபவம் வாய்ந்த ராஜதந்திரிகளின் தலைமையில், இந்தியாவின் வெளியுறவு கொள்கை, தன்னம்பிக்கை, துணிவு மற்றும் தேச நலனை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு சர்வாதிகாரி என்று அரசியல் எதிர்ப்பாளர்களால் சித்தரிக்கப்பட்டாலும், அவர் திறமையானவர்களை தேடிக் கண்டுபிடித்து உரிய பொறுப்புகளை வழங்கியுள்ளார் என்பதே உண்மை. இத்தகைய தலைமைப் பண்புதான், இந்தியாவுக்கு நிர்மலா சீதாராமன், அமித் ஷா, ஜெய்சங்கர் போன்ற வலிமையான ஆளுமைகளை கொடுத்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
