அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை கெளரவிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் ஒரு ஆடம்பரமான விருந்தை நடத்தினார். இதில், சவூதி அரேபியாவின் தேசிய கொடியின் நிறத்தை ஒத்த பச்சை நிறத்தில் கிளாமர் உடையை அணிந்து மெலனியா ட்ரம்ப் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த சந்திப்பின்போது அமெரிக்காவில் 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்வதாக இளவரசர் முகமது பின் சல்மான் உறுதியளித்ததற்கு ட்ரம்ப் அவரை பாராட்டினார். இளவரசரின் கருப்பு கார் வந்தபோது ஜனாதிபதியுடன் கைகோர்த்து ட்ரம்ப் மனைவி மெலனியா காணப்பட்டார்.
மெலனியா அணிந்திருந்த $3,350 இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சம்) மதிப்புள்ள பச்சை நிற உடையானது, முகமது பின் சல்மானுக்கு மறைமுகமான ஆதரவை வெளிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்பட்டது.
விருந்தில் சவுதி அரேபியா இளவரசர் தனியாக வந்தாலும், அவருடன் சவூதி தூதுக்குழுவும், எலான் மஸ்க் உட்பட பல அமெரிக்க வர்த்தக தலைவர்களும் கலந்துகொண்டனர். ஜூன் மாதம் ட்ரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்கு பிறகு எலான் மஸ்க் வெள்ளை மாளிகைக்கு வந்தது இதுவே முதல்முறை.
மேலும் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுடன் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
