அதிமுக கூட்டணிக்கு வர தயார்.. ஆனால் பாஜகவை நீக்கிவிட்டு காங்கிரஸை கூட்டணியில் சேர்க்க வேண்டும்.. புதிய நிபந்தனை விதித்தாரா விஜய்? ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. திமுக கூட்டணியும் உடையும்.. கொள்கை எதிரியுடனும் கூட்டணி இல்லை.. பந்து இப்போது எடப்பாடி கையில்.. என்ன செய்ய போகிறார்?

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தனது கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது முதல், அவர் எந்க் கூட்டணியில்…

vijay eps

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தனது கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது முதல், அவர் எந்க் கூட்டணியில் சேரப் போகிறார் என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. இந்த சூழலில், அவர் அதிமுக கூட்டணிக்கு வர தயார் என்றும், ஆனால் அதற்கு ஒரு முக்கிய நிபந்தனையை விஜய் விதித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் நோக்கர்கள் மத்தியில் பேசப்படும் தகவலின்படி, நடிகர் விஜய் அதிமுக கூட்டணியில் இணைவதற்கு ஒரு ஆச்சரியமான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கோரிக்கை என்னவெனில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியை அதிமுக தனது கூட்டணியில் இருந்து முற்றிலும் நீக்க வேண்டும். அதற்கு பதிலாக, தற்போது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க வேண்டும்.

இந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதிமுக, காங்கிரஸ், மற்றும் விஜய்யின் கட்சி அடங்கிய புதிய பலமான அணி உருவானால் மட்டுமே, அவர் அதிமுக கூட்டணியில் இணைவார் என்று கூறப்படுகிறது.

விஜய்யின் இந்த கோரிக்கை வெறும் கூட்டணி பேச்சுவார்த்தை அல்ல, மாறாக ஒரு தீவிர அரசியல் வியூகம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் அவர் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய இலக்குகளை அடைய முயற்சிக்கிறார்:

1. காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து பிரிப்பது, திமுகவின் பலத்தை வெகுவாக குறைக்கும். பாரம்பரியமாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்க்கு என ஒருசில வாக்கு சதவீதம் இருப்பதோடு, சிறுபான்மையினர் வாக்குகளையும் கூட்டணிக்கு ஈர்க்கிறது. காங்கிரஸ் விலகினால், திமுக கூட்டணி பலவீனம் அடையும்.

2. விஜய் எப்போதும் பாஜகவின் சித்தாந்தங்களுக்கும் அதன் கொள்கைகளுக்கு முற்றிலும் முரண்பட்டவர். பாஜகவை நீக்குவதன் மூலம், அவர் தனது கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற உறுதியான செய்தியை வாக்காளர்களுக்கு தெளிவுபடுத்த முடியும்.

விஜய் விதித்துள்ள இந்த கடுமையான நிபந்தனையானது, அதிமுக கூட்டணியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. கொள்கை எதிரியை தவிர்ப்பது, பிரதான எதிரியான திமுகவின் பலத்தை குறைப்பது என்ற இரட்டை இலக்குடன் விஜய் காய் நகர்த்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி இந்த சவாலை எப்படி சமாளிக்கப் போகிறார், விஜய்யின் நிபந்தனைக்கு இணங்கி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவாரா, அல்லது விஜய்யின் கூட்டணியை நிராகரித்துவிட்டு பாஜகவுடன் தொடர்வாரா என்பதுதான் தமிழக அரசியல் வட்டாரத்தின் அடுத்தகட்ட விவாத பொருளாக இருக்கும்.