உனக்கு மட்டும் தான் எல்லையில் பரபரப்பை ஏற்படுத்த தெரியுமா? எங்களுக்கும் தெரியும்.. சீன எல்லையில் இந்தியாவின் விமான படைத்தளம்.. 13,700 அடி உயரத்தில்.. உலகிலேயே மிக உயரமான போர் தளம்.. 35 கிமீ நீளம்.. சீனாவின் எல்லை ராணுவ குவிப்புக்கு இந்தியாவின் தரமான பதிலடி.. நட்பு வேண்டுமா நாங்கள் ரெடி.. மோதி பார்க்கனுமா? அதுக்கும் ரெடி..!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய விமானப்படை உலகின் மிக உயரமான போர் விமான தளத்தை லடாக்கில் உள்ள நியோமாவில் (Nyoma) திறந்து வைத்துள்ளது. இது சீன…

niyomi

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய விமானப்படை உலகின் மிக உயரமான போர் விமான தளத்தை லடாக்கில் உள்ள நியோமாவில் (Nyoma) திறந்து வைத்துள்ளது. இது சீன எல்லையை ஒட்டி, இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் ஒரு மாபெரும் பொறியியல் சாதனையாகும்.

இந்திய விமானப்படையின் தளபதி ஏ.பி. சிங் அவர்கள், லடாக்கில் திபெத் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த விமான தளத்தைத் திறந்து வைத்தார். இந்த நியோமா விமான தளம் கடல் மட்டத்திலிருந்து 13,700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த உயரம் காரணமாகவே இது உலகின் மிக உயரமான போர் விமான தளமாக விளங்குகிறது.

உண்மையான கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து வெறும் 30 முதல் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதால், அவசர காலங்களில் மிக விரைவான பதிலடி கொடுக்க இது உதவுகிறது. இங்கு 3 கி.மீ. நீளமுள்ள ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இது ரஃபேல் போர் விமானங்கள், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய சுகோய்-30 MKI விமானங்கள், மிஹ்-29 ஜெட் விமானங்கள் மற்றும் C-17 குளோப் மாஸ்டர் போன்ற கனரக இராணுவ போக்குவரத்து விமானங்களை கூட இயக்க முடியும் வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

நியோமாவிலிருந்து இந்திய விமானங்கள் புறப்படும்போது, சீன நடவடிக்கைகளை வான்வழியாக கண்காணிப்பதற்கும், தேவைப்படும்போது திபெத் மற்றும் ஜின்ஜியாங்கில் உள்ள சீன தளங்களில் ஆழமான தாக்குதல்களை நடத்துவதற்கும் ஒரு அரிய வாய்ப்புக் கிடைக்கிறது.

இந்தியா தனது எல்லை பாதுகாப்பை அவசரமாக வலுப்படுத்த வேண்டிய தேவைக்கு முக்கிய காரணம், சீனா தனது இராணுவ கட்டமைப்புகளை LAC நெடுகிலும் அபாரமாக அதிகரித்து வருவதே ஆகும்.

கட்டுமானத் தீவிரம்: 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA), லடாக் முதல் அருணாச்சலம் வரை, LAC நெடுகிலும் புதிய ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகள், நிலத்தடித் தளங்கள், பெரிய புதிய இராணுவத் தளங்கள் ஆகியவற்றைக் கட்டியுள்ளது.

சீனப் படைகள், தங்கள் ஸ்டெல்த் போர் விமானங்களையும் (J-20), வெடிகுண்டுகள் மற்றும் உளவு விமானங்களையும் ஹோட்டான், காஷ்கர், ஷிகாட்ஸே போன்ற முக்கிய விமான நிலையங்களில் நிறுத்தியுள்ளன. குறிப்பாக, நவீன J-20 ஸ்டெல்த் போர் விமானங்கள் சிக்கிம் எல்லையிலிருந்து வெறும் 150 கி.மீ. தொலைவில் திபெத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

எல்லையில் நிரந்தர உரிமையை நிலைநாட்ட, சீனா பல ‘எல்லைப் பாதுகாப்பு கிராமங்களை’ கட்டியுள்ளது. இவை இரட்டை நோக்கம் கொண்ட புறக்காவல் நிலையங்களாக செயல்படுகின்றன. சீனாவின் இத்தகைய இராணுவ குவிப்புக்கு சவால் விடும் வகையில், நியோமா விமானத் தளம் இந்தியாவின் ‘இரும்பு கேடயம்’ போல வடக்கு எல்லையில் செயல்படும்.

நியோமா, பாங்காங் ஏரியின் தெற்கே அமைந்துள்ளதால், டேப்சாங் மற்றும் டெம்சோக் போன்ற சிக்கல் மிகுந்த எல்லை பகுதிகளில் இந்திய இராணுவம் உடனடியாக பதிலடி கொடுக்கும் திறனை பெறுகிறது. மேம்படுத்தப்பட்ட இந்த தளத்திலிருந்து ரஃபேல் மற்றும் சுகோய்-30 விமானங்கள் உடனடியாக புறப்பட்டு, மோதல் ஏற்படும்போது வான் சக்தியின் ஆரம்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியும்.

C-17 குளோப் மாஸ்டர் மற்றும் IL-76 விமானங்களை இயக்க முடியும் என்பதால், பீரங்கிகள் , வீரர்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை நேரடியாக முன் வரிசைக்கு விரைவாக கொண்டு செல்ல முடியும். ஆனால் அதே நேரத்தில் நியோமாவின் சாதனைக்கு பின்னால், அதன் உயரமான அமைப்பால் ஏற்படும் சவால்களும் உள்ளன:

இதுபோன்ற மிக உயர்ந்த உயரங்களில், காற்றில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதால் விமான என்ஜின்களின் செயல்திறன் குறையும். இதனால் அதிக நீளமான ஓடுபாதைகள் தேவைப்படுவதோடு, விமானம் சுமந்து செல்லும் சுமையின் திறன் 50% வரை குறையலாம். இந்த சவாலை சீனாவும் திபெத்தில் எதிர்கொள்கிறது.

LAC-க்கு மிக அருகில் இருப்பதால், நியோமா விமானத்தளம் சீன பீரங்கிகள், டிரோன்கள் மற்றும் மின்னணு போரின் இலக்காக மாற வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்திய விமானப்படையின் இந்த வியூகம், சமவெளி பகுதிகளில் உள்ள மற்ற விமானத் தளங்களுடன் இணைந்து செயல்படுவதால், முழு சுமையுடன் தாக்குதல் நடத்தும் கூடுதல் பலம் இந்தியாவிற்கு உள்ளது. மேலும், நியோமா லடாக்கில் உள்ள இந்திய விமானப்படையின் மூன்றாவது உயரமான விமான நிலையம் ஆகும். தௌலத் பெக் ஓல்டி மற்றும் ஃபுக்சே ஆகியவை இதைவிட உயரமானவை என்றாலும், அங்கு போர் விமானங்கள் இயக்கப்படுவதில்லை.

நியோமா தளத்தின் திறப்பு, கடினமான இயற்கைச் சூழலிலும் கூட தனது எல்லைகளை பாதுகாக்க இந்தியா எடுத்துள்ள துணிச்சலான நடவடிக்கையை காட்டுகிறது.