அண்மையில் வெளிவந்த பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், இந்திய அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் அசைக்க முடியாத ஆளுமைக்கு கட்டியம் கூறுவதாகவும், 2029 ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமர் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அரசியல் திறனாய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ச்சியான ஆட்சிக்கு எதிரான அலை இருந்தபோதும், நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கான காரணங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம், பா.ஜ.க., நிதிஷ் குமார் , மற்றும் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (LJP) ஆகியவை ஒன்று சேர்ந்த பலமான சமூக பின்புலம் கொண்ட சமூகரீதியாக பொருத்தமான கூட்டணி அமைந்ததே ஆகும்.
பா.ஜ.க. நம்பர் 1 கட்சியாகவும், நிதிஷ் குமார் நம்பர் 3 கட்சியாகவும், சிராக் பஸ்வான் கட்சி நம்பர் 4 கட்சியாகவும் இருந்தபோதும், இவர்களின் ஒருங்கிணைவு எதிரணிகளை வீழ்த்தியது.
லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக இருந்தபோது, நிதிஷ் குமாரை ‘ஆட்டிப்படைத்ததாக’ எழுந்த கருத்துக்கள், யாதவர்களை தவிர மற்ற சாதிகளை திரள செய்து பா.ஜ.க. கூட்டணிக்கு சாதகமாக்கியது. மேலும், நிதிஷ் குமார் மீண்டும் பா.ஜ.க.வுடன் இணைந்தபோது அவருக்கு கூடுதல் ஆதரவு கிடைத்து, வெற்றியை உறுதிப்படுத்தியது.
பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்கத்திற்கு குறைவான இடங்களில் வெற்றி பெற்று பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதற்கு, காங்கிரஸுக்கும் ஆர்.ஜே.டி.க்கும் இடையிலான மனஸ்தாபம் ஒரு காரணம்.
தமிழகத்தில் தி.மு.க.விடம் அடங்கி நடப்பதை போல, பீகாரில் தேஜஸ்வி யாதவிடம் ‘பெட்டி பாம்பாய்’ அடங்கி இருப்பதுதான் காங்கிரஸுக்கு நல்லது. கட்சி வளர்க்கிறேன் என்று எதிர்த்து பிரிவினை ஏற்படுத்தினால், மீதமுள்ள வாக்குகளும் பா.ஜ.க.வுக்கு சென்றுவிடும்.
‘இன்று பீகார், நாளை தமிழ்நாடு’ என்ற முழக்கங்கள் சமூக ஊடகங்களில் எழுந்தாலும், அரசியல் விமர்சகர்கள் தமிழ்நாட்டு அரசியல் சூழல் வேறுபட்டது என கூறுகின்றனர். தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி, பீகாரின் தேசிய ஜனநாயக கூட்டணியைவிட சமன்பாட்டில் பலமாக உள்ளது. தி.மு.க. 45%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. தி.மு.க.வின் வலுவான கூட்டணியை தோற்கடிக்க வாய்ப்பு குறைவு
பீகார் போல தமிழகத்தில் கூட்டணி சமன்பாட்டை உருவாக்க, அ.தி.மு.க.வின் தலைமை முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையின் ஜெயிக்க முடியாது; அவரை முன்னிறுத்தியும் ஜெயிக்க முடியாது” என்ற நிலை உள்ளது.
மோடி அலை 2029 வரை நீடிக்கும் என்பதையும், பலவீனமான எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணியை சார்ந்து இருக்க வேண்டும் என்பதையும், மேலும், தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு அண்ணாமலையின் வியூகங்களே முக்கியப் பங்கு வகிக்கும் என்பதையும் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
