Exit Poll சொன்னபடியே நடந்தது.. NDA கூட்டணி முன்னிலை; பெரும்பான்மை கிடைத்தது.. மீண்டும் நிதிஷ்குமார் முதல்வரா? பாஜக கேம் விளையாடுமா? பல கட்சிகளை வெற்றி பெற வைத்த பிரசாந்த் கிஷோருக்கு சொந்த கட்சியை வெற்றி பெற வைக்க தெரியவில்லை..

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஆரம்ப கட்ட நிலவரங்களிலேயே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியது. மொத்தமுள்ள 243…

Bihar

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஆரம்ப கட்ட நிலவரங்களிலேயே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியது.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில், ஆரம்ப கட்ட நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி 122 என்ற பாதிக்கும் அதிகமான எண்ணிக்கையை அதாவது பெரும்பான்மையை கடந்தது. அதே சமயம், மகாகத்பந்தன் கூட்டணி 60-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பா.ஜ.க. முன்னிலை: சற்றுமுன் நிலவரப்படி, ஆர்.ஜே.டி.க்கு 76 தொகுதிகளிலும் பா.ஜ.க 72 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் ஆர்ஜேடி 58 தொகுதிகளிலும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

இவை மிகவும் ஆரம்ப கட்ட நிலவரங்கள் என்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியா அல்லது மகாகத்பந்தன் கூட்டணியா வெற்றி பெறப்போகிறது என்பது மாலைக்குள் தெரியவரும்.

பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஆளும் NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தாலும், எதிர்க்கட்சி கூட்டணி கணிப்புகளை மீறி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது.

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தலில் களத்தில் இருந்த நிலையில் அக்கட்சி வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பல கட்சிகளை வெற்றி பெற வைத்த பிரசாந்த் கிஷோருக்கு சொந்த கட்சியை வெற்றி பெற வைக்க தெரியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தியா கூட்டணி சார்பில் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், ஆளும் NDA கூட்டணி முதலமைச்சர் வேட்பாளரை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. NDA வெற்றி பெற்றாலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் நிதிஷ்குமார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? அல்லது முதல்வர் வேட்பாளர் மாற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..