இஸ்ரேலுடன் இணைந்து அதிநவீன ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா.. இனி எதிரி நாடுகள் மட்டுமல்ல, வல்லரசு நாடுகளும் வாலாட்ட முடியாது.. ஒலியை விட அதிக வேகம்.. ஜாம் எதிர்ப்பு திறன்.. துல்லிய தாக்குதல்.. ’மேக் இன் இந்தியா’வின் அற்புதம்..

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே பல ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான நாகரிக உறவுகள் இருந்தாலும், முழுமையான ராஜதந்திர உறவுகள் 1992ஆம் ஆண்டில்தான் நிறுவப்பட்டன. செப்டம்பர் 17, 1950 அன்று இஸ்ரேலை அங்கீகரித்த முதல் நாடுகளில்…

missilee

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே பல ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான நாகரிக உறவுகள் இருந்தாலும், முழுமையான ராஜதந்திர உறவுகள் 1992ஆம் ஆண்டில்தான் நிறுவப்பட்டன. செப்டம்பர் 17, 1950 அன்று இஸ்ரேலை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். தற்போது, இந்த இரு நாடுகளின் உறவும் புதிய உச்சிக்கு சென்றுள்ள நிலையில், இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், இஸ்ரேலுடன் இணைந்து அதிநவீன ஏவுகணைகளை தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி, 2020 முதல் 2024 வரை இஸ்ரேலின் மொத்த பாதுகாப்பு ஏற்றுமதியில் சுமார் 34% இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இந்தியா, இஸ்ரேலின் மிகப்பெரிய பாதுகாப்பு வாடிக்கையாளர்களில் ஒன்றாக திகழ்கிறது.

இரு நாடுகளுக்குமிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் அமீர் பாரம் மற்றும் இந்திய பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் நவம்பர் 4 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்தியா, இஸ்ரேலின் இரண்டு அதிநவீன ஏவுகணைகளை உரிமம் மூலம் இந்தியாவில் தயாரிக்க தீவிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1. ஏர் லைல் ஏவுகணை

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்று தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை, எதிரிகளின் பாதுகாக்கப்பட்ட இலக்குகளை தாக்க பயன்படும். இதன் முக்கிய பலம் கட்டளை மையங்கள், விமானப்படைத் தளங்கள், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் கடற்படை கப்பல்கள் போன்ற உயர் மதிப்புள்ள இலக்குகளுக்கு எதிராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை ஒலியை விட அதிக வேகத்தில் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. மேலும், இது தாக்கும்போது துணை சேதங்களை குறைத்து, இலக்கின் வெற்றியை அதிகப்படுத்தும். இது எளிதாக எந்தவொரு விமானத்திலும் ஒருங்கிணைக்கப்படலாம். மோசமான வானிலையிலும் இலக்கை எட்ட மேம்பட்ட வழிசெலுத்தல் அமைப்புகளும், ஜாம் எதிர்ப்பு திறன்களும் இதில் உள்ளன.

2. ஐஸ்பிரேக்கர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை

ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்று தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை, நீண்ட தூரம் சென்று துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுத அமைப்பாகும். இது பல்வேறு வகையான உயர் மதிப்புள்ள தரை மற்றும் கடல் இலக்குகளுக்கு எதிராக செயல்படும்.

மின்னணு எதிர்ப்பு நடவடிக்கைகளை தாங்கும் ஆற்றல் கொண்டது. மேலும், இது அனைத்து வானிலையிலும் இலக்கை துல்லியமாகக் கண்டறியும் எலெக்ட்ரோ-ஆப்டிகல் சீக்கர் மற்றும் தானியங்கி இலக்கு அங்கீகார திறன்களை பயன்படுத்துகிறது.

சிறிய மற்றும் எடை குறைந்த ஐஸ்பிரேக்கர், ஜெட் போர் விமானங்கள், இலகுரக தாக்குதல் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய கடற்படைக் கப்பல்கள் போன்ற பல தளங்களில் பயன்படுத்த ஏற்றது.

இந்த கூட்டு தயாரிப்பு ஒப்பந்தங்கள், இந்தியா தனது உள்நாட்டு பாதுகாப்பு தயாரிப்புத் திறனை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதில் இஸ்ரேலின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டு காட்டுகிறது.