குழந்தைகளுக்கு கீரை என்றாலே பிடிக்காது. ஆனால், கீரை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் குழந்தைகள் காதில் ஏறாது. கீரைதான் குழந்தைகளுக்கு பிடிக்காதே தவிர, பூரின்னா கொள்ளை பிரியம். அதனால்,குழந்தைகளை கீரைகளை சாப்பிட வைக்க ஒரு எளிமையான வழிதான் மேத்தி பூரி..
வெந்தயக்கீரையை இந்தில மேத்தி என சொல்வாங்க. வெந்தயக்கீரையை சேர்த்து செய்யும் பூரியைதான் மேத்தி பூரின்னு சொல்வாங்க. இனி மேத்தி பூரி செய்முறையை பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப்
வெந்தயக்கீரை – வெந்தயக்கீரை – 1கப்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளஊ
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை..
வெந்தயக்கீரையை கழுவி, சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, உப்பு, மிளகாய்த்தூள், தண்ணீர் சேர்த்துக் கலந்து பிசைந்து 15 நிமிடம் ஊற விடவும்..
பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து பூரிகளாக தேய்த்து வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்த பூரியில் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
ஆரோக்கியமான மேத்தி பூரி தயார்.