நன்றி உணர்ச்சி இல்லாதவரா விஜய்? தனக்காக ஆதரித்து பேசியவருக்கு ஒரு நன்றி கூட சொல்லலையே.. அதிமுகவுக்கு இந்த அவமானம் தேவைதான்.. 50 ஆண்டுகால கட்சி, ஒரு புதிய கட்சியை நம்பி பிழைப்பு நடத்துவதா? பத்திரிகையாளர் மணி காட்டம்..!

திரைத்துறையிலிருந்து தீவிர அரசியலுக்கு திரும்பியுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ சமீபத்தில் நடத்திய பொதுக்குழு கூட்டமானது, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தெளிவான செய்திகளை விதைத்துள்ளது. எனினும், இந்த கூட்டத்தின் விளைவுகள் அ.தி.மு.க-வுக்கு பெரும்…

vijay mani

திரைத்துறையிலிருந்து தீவிர அரசியலுக்கு திரும்பியுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ சமீபத்தில் நடத்திய பொதுக்குழு கூட்டமானது, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தெளிவான செய்திகளை விதைத்துள்ளது. எனினும், இந்த கூட்டத்தின் விளைவுகள் அ.தி.மு.க-வுக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

38 நாள் வனவாசத்திற்கு பிறகு தீவிர அரசியலுக்கு திரும்பியுள்ள விஜய்யின் இந்த பொதுக்குழுக் கூட்டம், அவர் அ.தி.மு.க-வுக்கு ஒரு தெளிவான செய்தியை சொன்னதாக மூத்த பத்திரிக்கையாளர் மணி குறிப்பிடுகிறார்.

அதிமுகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை. தவெக தான். தி.மு.க-வுக்கு மாற்று. நான் தான் முதலமைச்சர்” என்ற செய்தியை விஜய் மிக தெளிவாக சொல்லியிருக்கிறார்.

வலிய சென்று விஜய்யை ஆதரித்த எடப்பாடி பழனிசாமிக்கு, இந்தக் கூட்டத்தின் மூலம் “நல்லதொரு பரிசு” கிடைத்திருப்பதாகவும், இது அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட பின்னடைவு என்றும் மணி விமர்சிக்கிறார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு தாங்கள் சோர்ந்து போகவில்லை என்றும், முன்பு செய்தது போலவே ஆக்ரோஷமான தி.மு.க. எதிர்ப்பை முன்னெடுக்க போவதாகவும் விஜய் பேசியுள்ளார். குறிப்பாக, ஆதவ் அர்ஜுனா போன்றோர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோரை நேரடியாக தாக்கிப் பேசியிருப்பது, தர டிக்கெட் அரசியலுக்குக்கூட தாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை காட்டுவதாக உள்ளது.

கரூர் துயரச் சம்பவம் குறித்த விவகாரத்தில், தி.மு.க. அரசே காரணம் என்று மக்கள் நம்பியதால், விஜய்யின் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது உண்மை என்றும், இந்த கோபத்தின் நிழலில் இருந்து தவெக இன்னும் முற்றிலுமாக வெளியே வரவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது:

கரூர் விவகாரம் சட்டசபையில் விவாதிக்கப்பட்டபோது, அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி விஜய்யை ஆதரித்து, தி.மு.க. அரசின் மீது மட்டுமே தவறு என்று பேசினார். சபை போன்ற முக்கியமான மன்றங்களில், பிரதிநிதிகள் இல்லாத தவெகவுக்காக பேசிய அ.தி.மு.க-வுக்கு, இந்த கூட்டத்தில் ஒரு நன்றி தீர்மானம்கூட நிறைவேற்றவில்லை அல்லது குறைந்தபட்ச நன்றி உணர்ச்சிகூட வெளிப்படுத்தப்படவில்லை என்று பத்திரிக்கையாளர் மணி விமர்சிக்கிறார்.

உதவி செய்தவர்களையே விமர்சித்து பேசுவது” என்பது ஒரு அடிப்படை நாகரிகமற்ற செயல் என்றும், தவெகவின் இந்த செயல்பாடு அரசியல் திமிரை காட்டுவதாகவும் அவர் சாடுகிறார்.

இந்த முடிவால் மிகவும் பாதிக்கப்பட்டது அ.தி.மு.க-தான். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் ஒரு கட்சிக்கு, விஜய்யின் வருகை ஒரு மாமணியாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்திருந்தார். தன் பலவீனத்தை வெளிப்படையாக காட்டி, விஜய்யை ஆதரித்து அவர் பேசியதை, இன்றைய பொதுக்குழுவின் முடிவு பயங்கரமாக பழி வாங்கியுள்ளது.

பலவீனம் இருக்கலாம், ஆனால் அதை பொதுவெளியில் காட்டிவிடக் கூடாது.” ஆனால், விஜய்யின் வருகைக்காக அ.தி.மு.க. தலைவர் வெளிப்படையாக காத்திருந்ததும், சட்டசபையில் சென்று அவருக்காக வக்காலத்து வாங்கியதும் மிகப்பெரிய அரசியல் தவறு.

அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் நிலவும் உளவியல் சோர்வை இந்த சம்பவம் மேலும் அதிகரிக்கும். தி.மு.க-வை வீழ்த்த, விஜய்யுடன் கூட்டணி அமைப்பதுதான் சரியான வழி என்று தொண்டர்கள் மத்தியில் ஒரு எண்ணம் உருவாகி வந்த நிலையில், விஜய்யின் இந்த கடினமான நிலைப்பாடு அ.தி.மு.க-வுக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது.

ஏற்கனவே ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் போன்றோரை நீக்கிவிட்டு, வலுவான கூட்டணியை அமைக்க திணறும் எடப்பாடி, விஜய்யின் வரவுக்காக காத்திருந்தது அ.தி.மு.க-வின் அடிப்படை பலம் குறித்து அவரே சந்தேகம் கொள்வதாக உள்ளது என்றும், இது முழுக்க முழுக்க அ.தி.மு.க-வுக்கே பலவீனம் என்றும் பத்திரிக்கையாளர் மணி கூறுகிறார்.

அ.தி.மு.க. போன்ற 50 ஆண்டுகால கட்சிக்கும், ஒரு புதிய கட்சிக்கும் இடையே ஒப்பிடுவது பொருத்தமற்றது. தவெக தனது அரசியல் திமிரையும் நன்றி உணர்ச்சியின்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. நீண்ட காலத்திற்கு ஒரு புதிய கட்சி அரசியல் களத்தில் தாக்கு பிடிக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், இப்போதைக்கு “யானை மண்ணள்ளி தலையில் போட்டுக் கொண்ட கதையாக,” இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அ.தி.மு.க-வுக்குத்தான் பெரும் பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு மணி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.