விஜய்யை தனித்து போட்டியிட பாஜக விடுமா? ஒரே நேரத்தில் இரு எதிரிகளை சமாளிப்பாரா விஜய்? தனித்து போட்டியிட்டால் சமாளித்து தான் ஆகனும்.. எவ்வளவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா? பொதுக்குழுவின் அறிவிப்பால் தமிழக அரசியலில் சலசலப்பு..!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என்ற கட்சியின் பொதுக்குழு அறிவிப்பு, தமிழக அரசியலில் ஒரு புயலை கிளப்பியுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், திராவிட கட்சிகள்…

vijay amitshah

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என்ற கட்சியின் பொதுக்குழு அறிவிப்பு, தமிழக அரசியலில் ஒரு புயலை கிளப்பியுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், திராவிட கட்சிகள் மற்றும் மத்தியிலுள்ள பாஜக ஆகிய இரு சக்திவாய்ந்த எதிரிகளையும் தனித்து நின்று விஜய் எப்படி சமாளிக்க போகிறார் என்பதே பரவலாக எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

“திமுகவுடனும், அதிமுகவுடனும் கூட்டணி இல்லை” என்று திட்டவட்டமாக அறிவித்த தவெக, தாங்கள் ஒரு தனி பாதையில் பயணிக்க போவதை சுட்டி காட்டியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, ஒரு புதிய கட்சி தனித்து நின்று கணிசமான வாக்குகளை பெறுவது என்பது சவாலானது.

இரு திராவிட கட்சிகளையும் விமர்சித்து, ‘மாற்று அரசியல்’ என்ற முழக்கத்துடன் விஜய் களமிறங்குவதால், இந்த வாக்குகள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு போகாமல் பிரியும் வாய்ப்புள்ளது. இது, பாரம்பரியமாக இரு கட்சிகளுக்கிடையே மட்டுமே பிரிந்து செல்லும் வாக்குகளில் சலசலப்பை ஏற்படுத்தும்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சி முறை மீது சலிப்புற்றுள்ள இளைய தலைமுறையினர் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில், விஜய்யின் ‘மாற்றம்’ என்ற முழக்கம் வரவேற்பை பெறலாம். இருப்பினும், இது வாக்குகளாக மாறும் அளவுக்கு பெரிய எழுச்சியை உருவாக்குமா என்பது கேள்விக்குறியே.

தவெகவின் இந்த தனித்துப் போட்டி அறிவிப்பு, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஒரு சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் வலுவாக காலூன்ற முயற்சிக்கும் பாஜக, விஜய்யை ஒரு மாற்று சக்தியாக பார்க்கும் போக்கை கொண்டிருந்தது.

நடிகர் விஜய் அவர்களுக்கு உண்மையிலேயே கொள்கை எதிரி பாஜகதான்” என்று தவெக தரப்பிலிருந்து மறைமுகமாக பேசப்பட்டாலும், பாஜகவின் சில மூத்த தலைவர்கள் கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வந்தபோது, அதை தவெக தலைமை திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் தனித்து நிற்பது, திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கும் என்ற எதிர்பார்ப்பு பாஜகவுக்கு சாதகமாக அமையலாம். திராவிட கட்சிகளின் வாக்குகளை குறி வைக்கும் பாஜக, இந்த பிரிவினையைப் பயன்படுத்தித் தங்கள் பலத்தை சற்று உயர்த்தி கொள்ள முனையலாம்.

இருப்பினும், விஜய்யின் எழுச்சி எதிர்பாராத அளவுக்கு வலுவடைந்தால், அது பாஜகவின் வாக்குகளையும் பாதிக்கக்கூடும். எனவே, பாஜக தனது வலுவான மத்திய நிர்வாக பலம் மற்றும் அரசியல் அழுத்தங்களை பயன்படுத்தி, விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அல்லது அவரை சமாளிக்க தனி வியூகங்களை வகுக்க அதிக வாய்ப்புள்ளது.

விஜய் தனித்து நின்று வெல்வது என்பது, அவர் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய எதிரிகளை சமாளிக்க வேண்டிய சவாலை குறிக்கிறது. அதிமுக, திமுகவின் பலமான கட்சி கட்டமைப்பு, பூத் கமிட்டி அமைப்புகள், நிதி பலம் மற்றும் நீண்டகால அரசியல் அனுபவம் ஆகியவற்றை தவெக சமாளிக்க வேண்டும். அதேபோல் பாஜகவின் தேசிய அளவிலான செல்வாக்கு, விசாரணை அமைப்புகள் மற்றும் மாநில அரசியலில் அதன் மறைமுக தலையீடுகள் ஆகியவற்றையும் தவெக சமாளிக்க வேண்டும்.

தனித்துப் போட்டியிட்டால் சமாளித்துதான் ஆகணும்” என்ற மனநிலையில் தவெக இருப்பதாகவே தெரிகிறது. கடந்த காலங்களில் பெரிய ஆளுமைகள் இல்லாமல் திராவிட கட்சிகளுக்கு எதிராக தமிழகத்தில் மாற்று அரசியல் முயற்சிகள் பல தோல்வியடைந்துள்ள நிலையில், விஜய்யின் இந்த துணிச்சலான அறிவிப்பு, ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், அரசியல் நோக்கர்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

எந்த கூட்டணியிலும் சேராமல், தனது சொந்த பலத்தை மட்டுமே நம்பி விஜய் தேர்தலை எதிர்கொள்ளும் இந்த முடிவு, தமிழக அரசியலில் ஒரு வரலாற்று பிளவுக்கான தொடக்கமாக அமையுமா அல்லது ஒரு சினிமா பிரபலம் சந்தித்த இன்னொரு அரசியல் சவாலாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.