நைஜீரியாவை தொட்டால் நாங்கள் வருவோம்.. கரீபியன் கடலில் அமெரிக்கா தலையிட்டால் ராணுவ நடவடிக்கை.. வெனிசுலா விஷயத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம், அமெரிக்கா தலையிட கூடாது.. அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா..!

சர்வதேச அரங்கில் தனது செல்வாக்கை அதிகரித்து வரும் சீனா, அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான வெளியுறவு கொள்கைகளுக்கு எதிராக, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் உள்ள தனது கூட்டாளி நாடுகளுக்கு ஆதரவாக பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.…

america china

சர்வதேச அரங்கில் தனது செல்வாக்கை அதிகரித்து வரும் சீனா, அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான வெளியுறவு கொள்கைகளுக்கு எதிராக, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் உள்ள தனது கூட்டாளி நாடுகளுக்கு ஆதரவாக பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பாக நைஜீரியா, கரீபியன் கடல் மற்றும் வெனிசுலா ஆகிய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை சீனா கடுமையாக கண்டித்துள்ளது.

நைஜீரியாவுக்கெதிரான அமெரிக்காவின் சில அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சீனா தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. நைஜீரியாவின் பங்காளியாக சீனா உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதாக கூறி, அந்நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கான அச்சுறுத்தலையும் உதவியை நிறுத்துவதாகவும் விடுத்திருந்தார்.

இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் (Mao Ning) பேசுகையில், “நைஜீரிய அரசாங்கம் அதன் தேசிய சூழ்நிலைக்கு ஏற்ற வளர்ச்சி பாதையில் மக்களுக்கு வழிகாட்ட சீனா உறுதியாக ஆதரிக்கிறது” என்று தெரிவித்தார். மேலும் மதம் மற்றும் மனித உரிமைகளை ஒரு சாக்காக பயன்படுத்தி, பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும், தடைகள் அல்லது ராணுவ பலத்தை பயன்படுத்த அச்சுறுத்துவதையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் தெரிவித்தார்.

அதேபோல் கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதாக கூறி அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ தாக்குதல்கள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை சீனா மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. சர்வதேச உறவுகளில் ராணுவ பலத்தை பயன்படுத்துவதையோ அல்லது பயன்படுத்த அச்சுறுத்துவதையோ சீனா எதிர்க்கிறது. மேலும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளையும் சீனா எதிர்க்கிறது. பிற நாடுகளின் கப்பல்களுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் ஒருதலைப்பட்ச மற்றும் அதிகப்படியான ‘அமலாக்க நடவடிக்கைகளையும்’ சீனா எதிர்க்கிறது என்று கூறியுள்ளது..

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro), அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சீனா, ரஷ்யா, மற்றும் ஈரானிடம் இருந்து இராணுவ உபகரணங்களை நாடுவதாக வெளிவந்த செய்திகளுக்கு சீனா பதிலளித்துள்ளது.

சீனாவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையேயான சாதாரண பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பு என்பது இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையேயானது. இது எந்த மூன்றாவது நாட்டையும் குறிவைக்கவில்லை, மேலும் எந்த மூன்றாம் தரப்பினரின் குறுக்கீடு அல்லது செல்வாக்கிற்கும் உட்பட்டது அல்ல. வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் எந்த சாக்கையும் பயன்படுத்தித் தலையிடுவதை சீனா எதிர்ப்பதாக உறுதியாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம், ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள முக்கிய பிராந்தியங்களில் அமெரிக்காவின் தலையீட்டை சீனா தீவிரமாக எதிர்க்கிறது என்பது தெரிய வந்துள்ளது.