Vijay Sethupathi Roast Bigg Boss Contestants : இப்படி ஒரு Host தான் பிக் பாஸுக்கு வேண்டுமென பார்வையாளர்கள் Fire விடும் அளவுக்கு கேள்வி கேட்டு அனைவரையும் ஆவேசமாக எதிர்கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் நேரத்தில் அவரை போல யாரால் இதை சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என்ற கேள்வி இருந்தது. விஜய் சேதுபதி அவர் இடத்தில் வந்து சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தி சென்றாலும் சில போட்டியாளர்களுக்கு ஆதரவாக அவர்களிடத்தில் எந்த கேள்வியும் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.
9 வது தமிழ் சீசனிலும் அந்த கேள்வி தொடர, FJ, கனி உள்ளிட்ட சில முக்கியமான போட்டியாளர்களின் பிரச்சனைகளை பற்றி விஜய் சேதுபதி எந்த கேள்வியும் கேட்பதில்லை என குற்றச்சாட்டு இருந்து வந்தது. அப்படி ஒரு சூழலில் தான் சமீபத்திய எபிசோடில் ஒருவரை கூட விடாமல், அனைத்து பிரச்சனைகளை பற்றி அனைவரிடமும் கேள்வி கேட்டு பட்டையை கிளப்பி இருந்தார் விஜய் சேதுபதி.
வாங்க சேதுபதி ணா..
திவாகரிடம் பேசும் போது, “ஏன் சும்மா கேமரா முன்னாடி கத்துறீங்க.. அத பாக்க முடியலைங்க.. ரீல்ஸ் பண்ணத்தான் இங்க வந்தீங்கன்னா எதுக்கு பிக்பாஸ் வரணும்?.. உங்ககிட்ட யாரும் எதுவும் பேச முடியுறதில்ல.. தராதரம்னு ஒரு மீட்டர் வெச்சுருக்கீங்க” என திவாகரிடம் காட்டமாக பேசினார் விஜய் சேதுபதி.. திவாகரின் தவறைச் சுட்டிக்காட்டி விஜய் சேதுபதி பேசிய போது மற்ற போட்டியாளர்கள் ஒன்றாக கைத்தட்டினர்.. இதை நிறுத்திய விஜய் சேதுபதி, ‘யாரும் கைத்தட்டாதீங்க.. உங்க யாருக்கும் அந்த உரிமை இல்ல’ என்று கூறினார்..
இதே போல, அனைவரிடமும் கத்திப் பேசி விவாதம் செய்யும் பார்வதியை கேள்வி கேட்ட விஜய் சேதுபதி, ‘நீங்க சொல்றத அடுத்தவங்க கேட்கலனு சொல்றீங்க.. ஆனா நீங்க அடுத்தவங்க சொல்றப்போ கத்தாம அத கேட்டுருக்கீங்களா?.. அப்புறம் எதுக்கு மத்தவங்கள நீங்க குறை சொல்றீங்க?’ என்றும் சீண்டினார். FJ வை விஜய் சேதுபதி எந்த கேள்வியும் கேட்பதில்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது.
இதற்கும் ஒரு முடிவு கட்டிய விஜய் சேதுபதி, ‘ஏற்கனவே ஒரு தடவ வெட்டிடுவேன்னு சொன்னீங்க.. இப்போ திவாகரை பாத்து நாக் அவுட் பண்ணிடுவேன்னு சொல்றீங்க.. இனிமேலும் இப்படி தான் பேசுவேன்.. இப்படி தான் இருப்பேன்னா சொல்லிட்டு தாராளமா வெளிய வரலாம்.. ஒன்னும் பிரச்சனை இல்ல’ என்றும் எச்சரித்தார். கலையரசனை நோக்கி பேசும் விஜய் சேதுபதி, ‘உங்களுக்கு ஒரு பாராட்டு.. எல்லாரும் கைத்தட்டுங்க.. எந்த சீசன்லயும் இதுவரை இத்தனை beep ஒருத்தர் பேசுறப்போ போட்டதே இல்ல.. நீங்க சிரிக்காதீங்க கலை.. என்ன beep-க்கு சிரிக்குறீங்க.. எத்தனை கெட்டவார்த்தை.. அதுல என்னங்க பெருமை இருக்கு?’ என்றும் ஆவேசமாக பேசினார்.
விஜய் சேதுபதி சம்பவம்..
ரம்யாவை யோசிக்கவே விடாமல் அவரை தவறான வழியில் அன்பு கொடுப்பதாக மூளைச்சலவை செய்யும் கனி மற்றும் சபரி தவறை சுட்டிக்காட்டிய விஜய் சேதுபதி, ‘நீங்க பேசி பேசி ரம்யா ஆட்டத்தை கெடுக்காதீங்க.. உங்க அன்பும் அக்கறையும் நல்லது.. உங்களுக்கு சிலையே வைக்கிறேன்.. ஆனா அத உள்ள பண்ணாதீங்க’ என்றார்.. இதே போல, சபரி சட்டை போடாமல் இருந்த போது அதை கண்டு கொள்ளாமல் இருந்த கனி, திவாகர் சட்டை போடாமல் இருந்த போது அதை அநாகரீகம் என்று சொல்லியிருந்தார்.
இதையும் கவனித்து கனியை எச்சரித்த விஜய் சேதுபதி, ‘நீங்கள் சபரியையும் கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஆனால் திவாகரை மட்டும் கேள்வி கேட்டீர்கள். அனைவரையும் சமமாக நடத்துங்கள். உங்கள் மீது அனைவருக்கும் ஒரு மரியாதை இருக்கிறது‘ என்றும் அறிவுறுத்துகிறார். இப்படி தன் மீதிருந்த விமர்சனங்களையம் உடைத்தெறிந்த விஜய் சேதுபதி, அனைத்து போட்டியாளர்களை லெஃப்ட் ரைட் வாங்கியதை இனிவரும் நாட்களில் தொடர வேண்டும் என்பதும் பார்வையாளர்களின் விருப்பமாக உள்ளது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

