Bigg Boss9 Tamil : எல்லாரையும் சமமா நடத்துங்க, இல்லன்னா.. அன்பு கேங்க் தல கனியை ‘அந்த’ சர்ச்சைக்காக கிழித்த விஜய் சேதுபதி.. அம்மாவுக்கு பேச்சே வரல..

Vijay Sethupathi Warns Kani : முந்தைய சீசன்களை போல இந்த முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் க்ரூப்பிசம் கொஞ்சம் அதிகமாக தான் இருந்து வருகிறது. இதன் பெயரிலேயே பல போட்டியாளர்கள் மோசமாக ஆடிய…

Vijay Sethupathi warns Kani

Vijay Sethupathi Warns Kani : முந்தைய சீசன்களை போல இந்த முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் க்ரூப்பிசம் கொஞ்சம் அதிகமாக தான் இருந்து வருகிறது. இதன் பெயரிலேயே பல போட்டியாளர்கள் மோசமாக ஆடிய போதிலும் நாமினேஷன் போன்ற ஆபத்தான இடத்திற்கு வராமல் மிக பாதுகாப்பாக ஆட்டம் ஆடி வருகின்றனர். மேலும் தங்களுக்கு பிடித்தவர்கள் தவறு செய்தால் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதும், வேண்டாதவர்கள் அதே தவறை செய்யும் போது அதை கண்டு போக்குவதும் என ஆட்களுக்கேற்ப தங்களது வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், கனி, சபரி, ரம்யா, கெமி ஆகியோர் ஒரு குழுவாக இருந்து தங்களுக்குள் இருப்பவர்களுக்கு முழு ஆதரவை கொடுத்து ஆடி வருகின்றனர். அந்த வகையில், திவாகர் சட்டை போடாமல் பிக் பாஸ் வீட்டில் சுற்றி வந்ததை கேள்வி கேட்ட கனி, அது அநாகரீகமான செயல் என்று சொல்ல, சபரி சட்டை இல்லாமல் இருந்த போதெல்லாம் அதை கண்டு கொள்ளாதவர் போல இருந்து விட்டார். இதை பார்வையாளர்களும் கவனித்து கேள்வி எழுப்ப, விஜய் சேதுபதியும் திட்டித் தீர்த்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

உங்களுக்கு வந்தா ரத்தம்..

திவாகர் சட்டை போடாமல் பிக் பாஸ் வீட்டில் வலம் வந்ததை சுட்டிக்காட்டி அவரிடமே அது பற்றி பேசிய கனி, ‘நீங்கள் இப்படி சட்டை இல்லாமல் இருப்பது கொஞ்சம் அநாகரீகமாக உள்ளது’ என கூறுகிறார். தான் ரீல்ஸ் செய்வதை கனி இப்படி விமர்சிக்கிறார் என கொதித்த திவாகர், ‘நீங்களும் FJவை கட்டிப்பிடிப்பது அநாகரீகமாக உள்ளது’ என சொல்லி அது பெரிய சர்ச்சையையே உருவாக்கி இருந்தது.

திவாகர் கனி – FJ பற்றி சொன்னது தவறு தான் என்றாலும் எப்போதும் மற்றவர்களை குறை சொல்லும் கனி திரு, சபரி உள்ளிட்ட ஒரு சிலர் சட்டை போடாமல் பிக் பாஸ் வீட்டில் வலம் வந்த போது அநாகரீகமாக இருப்பதாக ஒருமுறை கூட சொல்லவில்லை. திவாகர் மேல் தவறு இருந்தாலும் ஒருதலைப்பட்சமாக கனி குற்றஞ்சாட்டியதை பார்வையாளர்கள் பார்த்து கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதனிடையே, இது பற்றி பேசிய விஜய் சேதுபதி கனியிடமே, ‘திவாகர் சட்டை போடாம ரீல்ஸ் செஞ்சது தப்புன்னு சொன்னீங்க.. இதே மாதிரி எத்தனை பேர்கிட்ட நீங்க சொல்லிருக்கீங்க?’ என்று கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் கனி, ‘எல்லாருகிட்டயும் சொல்லல சார். ஆனா திவாகர்கிட்ட கொஞ்சம் பாத்து இருங்கன்னு மட்டும் சொன்னேன்’ என மழுப்பல் பதில் சொல்கிறார்.

எல்லாரையும்மா நடத்துங்க..

ஆனாலும் விடாமல் பிடித்த விஜய் சேதுபதி, ‘உங்க கருத்து எல்லாம் ஓகே. ஆனா அத ஏன் மத்தவங்ககிட்ட வைக்கல?’ என நோண்ட கனியும, ‘இத்தனை பேர் இருக்குற வீட்டுல கொஞ்சம் பொறுத்து போணும்’ என ஏதேதோ மழுப்பல் பதில்களை சொல்கிறார். பின்னர் சபரி, கம்ருதீன் ஆகியோர் சட்டை போடாமல் சுற்றியதாக கனி சொல்ல, அவர்களிடம் சொல்லாமல், ஏன் திவாகரை மட்டும் எச்சரித்தீர்கள் என்று கிடுக்குபிடி கேள்விகளையும் தொடர்ந்து விஜய் சேதுபதி முன் வைக்கிறார்.

இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் கனி திணற, ‘முன்னாடியே சட்டை போடாம இருக்குற பிரச்சனைய நீங்க பேசிருந்தா, அத சரி பண்ணிருக்கலாம். என்னை பொறுத்தவரைக்கும் நடத்துனா எல்லாரையும் சமமா நடத்துங்க.. எல்லாருக்கும் உங்க மேல மரியாதை அதிகமா இருக்கு” என்றும் விஜய் சேதுபதி அறிவுறுத்த கனியும் தலையாட்டிக் கொண்டு தனது க்ரூப்பில் இருக்கும் நபர்களுக்கு மட்டும் ஒருதலைப்பட்சமாக இருந்தது தவறு தான் என்பது போல நிற்கிறார்.

இனியாவது கனி அனைவரையும் சமமாக பார்த்து தன் மேல் இருக்கும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.