Biggboss Tamil Season 9: திவாகரையும் பாருவையும் வச்சு செய்த விஜய் சேதுபதி.. நீங்க பேசுறப்ப மத்தவங்க அமைதியா இருக்கனும்ன்னு நினைக்கிறிங்களே, மத்தவங்க பேசும்போது நீங்க அமைதியா இருந்தீங்களா? பாருவை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. இப்படி கத்தினா யார் ஷோ பார்ப்பா?

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 27 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், போட்டியாளர்கள் இடையே சண்டை சச்சரவுகளுக்குக் குறைவே இல்லை. குறிப்பாக, திவாகர் மற்றும் பாரு ஆகிய இருவரும் கிட்டத்தட்ட அனைவரிடமும் சண்டை போட்டு, அதிக…

BB 27

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 27 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், போட்டியாளர்கள் இடையே சண்டை சச்சரவுகளுக்குக் குறைவே இல்லை. குறிப்பாக, திவாகர் மற்றும் பாரு ஆகிய இருவரும் கிட்டத்தட்ட அனைவரிடமும் சண்டை போட்டு, அதிக சத்தம் போட்டு பேசி வருவது பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. தாங்கள் பேசும்போது மற்றவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பாரு, மற்றவர்கள் பேசும்போது கத்தி, அவர்களை பேச விடாமல் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த சூழலில், வார இறுதியில் நடிகர் விஜய் சேதுபதி தோன்றும் நாள் என்பதால், அவர் கத்துபவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப, விஜய் சேதுபதி, தனது கையில் ஒரு மைக்கை பிடித்துக்கொண்டு, நிகழ்ச்சியில் சத்தமாக கத்துபவர்களைச் சாடினார்.

“இப்படி கத்திக்கொண்டே இருந்தால் எப்படி ஷோ பார்ப்பது? உங்களுக்கு தெரியாதா? கத்தி கத்திப் பேசினால் ஏதாவது புரியுமா? கேக்குதா வினோத்? கேக்குதா பாரு? கேக்குதா திவாகர்?” என்று அனைவரையும் வறுத்தெடுத்தார்.

சற்று முன் வெளியான இன்னொரு ப்ரோமோவில், விஜய் சேதுபதி பாருவை நேரடியாக கேள்வி கேட்கிறார். “எதற்காக இவ்வளவு சத்தம் போடுகிறீர்கள் பாரு?” என்று கேட்கிறார். அதற்குப் பாரு, “ஒரு விஷயத்தைச் சொல்லும்போது மற்றவர்கள் அதை சொல்ல விடமாட்டேன் என்கிறார்கள்,” என்று பதிலளிக்கிறார். உடனே விஜய் சேதுபதி, “ஒரு விஷயத்தை நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள் அல்லவா? மற்றவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் அல்லவா? அதேபோல் நீங்கள் மற்றவர்கள் பேசும்போது அமைதியாக இருந்தீர்களா?” என்று நியாயமான கேள்வியை கேட்டார்.

அடுத்த காட்சியில், திவாகரை நோக்கி விஜய் சேதுபதி கேள்விகளை தொடுத்தார். “திவாகர், கத்துறீங்க, கத்துறீங்க, கத்துறீங்க.. இவர் ஒரு மீட்டர் கூட உள்ள போயிருக்கார். தராதரம் என்ற மீட்டர் வைத்திருக்கிறார் அவர்,” என்று கிண்டலாக சுட்டிக்காட்டினார். உங்களுக்கு கருத்து வேண்டுமானால் கருத்து சொல்லுங்கள். அது என்ன தராதரம் என்று சொல்ல,” என்று விஜய் சேதுபதி திவாகரின் பேச்சை கேள்விக்கு உள்ளாக்கினார். அதற்குத் திவாகர், “அவர்கள் நீ வா, போ என்று பேசுகிறார்கள்,” என்று காரணம் சொல்ல முயன்றார். விஜய் சேதுபதி, “நீங்கள் யார் இன்னொருத்தர் தராதரத்தை அளவிட?” என்று அழுத்தமாக கேட்டு திவாகரை ஆவேசமாக வறுத்தெடுத்தார்.

இந்த இரண்டு ப்ரோமோ வீடியோக்களையும் பார்க்கும்போது, இன்றைய நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும், நியாயமான ஆவேசத்துடனும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.