ஹார்மோன் சுரப்பு மாற்றத்தால் புதுசா பிரசவிச்ச தாய்மார்களுக்கு நெஞ்சு எரிச்சல், பசியின்மை, ஜீரணக்கோளாறு மாதிரியான பிரச்சனைகள் இருக்கும். அவற்றுக்கு வீட்டிலேயே இஞ்சி, பூண்டு சேர்த்து செஞ்ச தொக்கினை கொடுத்துவர நல்ல பலனை காணலாம்,
தேவையான பொருட்கள்..
தோல் நீக்கிய நாரில்லாத பிஞ்சு இஞ்சி துண்டு- ஒரு கிண்ணம்,
உரித்த பூண்டு – ஒரு கிண்ணம்,
காய்ந்த மிளகாய் – 10,
புளி – எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
வெல்லம் – சிறு உருண்டை,
நல்லெண்ணெய் – அரை கிண்ணம்,
கடுகு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை :
இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் இவை எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இரும்புக் கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும், அரைத்த விழுதைப் போட்டுக் கைவிடாமல் கிளறவும். சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கினால் இஞ்சி பூண்டு தொக்கு தயார்.
நன்றாக காய்ந்த கன்ணாடி/பீங்கான் பாட்டிலில் எடுத்துவைக்க நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
பசியின்மை, வயிறு மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. முக்கியமாய் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகச் சிறந்தது.