தமிழ்நாடு அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்கும், வியத்தகு வெற்றிகளுக்கும் பெயர் பெற்றது. திரையுலக ஜாம்பவான்கள் அரசியலில் தடம் பதிப்பது இங்கு புதிதல்ல. ஆனால், நடிகர் விஜய் எடுத்துள்ள அரசியல் பயணம், வழக்கமான சினிமா கவர்ச்சியையும் தாண்டி, தமிழகத்தில் ஒரு புதிய மக்கள் இயக்கமாக எழுச்சி பெற்று வருகிறது.
விஜய் மக்கள் இயக்கம், இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியின் துணையும் இன்றி, நேரடியாகத் தேர்தலில் போட்டியிட்டு, குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இந்த அடித்தளமே, அவர் முழு நேர அரசியல் கட்சி தொடங்கும்போது எழும் எதிர்பார்ப்புகளுக்கு அச்சாரமாக அமைகிறது.
விஜய் மக்கள் இயக்கம், உள்ளாட்சித் தேர்தல்களில் நிகழ்த்தியிருக்கும் ‘கட்சி இல்லா சாதனை’ இந்தியாவே திரும்பி பார்க்க வேண்டிய ஒன்று. அதாவது, கட்சி அங்கீகாரம் இல்லாத நிலையில், சுயேச்சையாக போட்டியிட்டு, பொது சின்னம் எதுவும் இல்லாமல் , விஜய்யின் நேரடி பிரசாரம் இல்லாமலேயே 100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களை இயக்கம் வெற்றி பெற செய்தது. இந்த குறிப்பிடத்தக்க வெற்றி, விஜய் மக்கள் இயக்கத்தின் அடிப்படை பலத்தையும், விஜய்யின் செல்வாக்கையும் நிரூபித்தது. இப்போது முறையாக புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டு, அதற்கு நிரந்தர சின்னம் பெற்று, விஜய்யே களத்தில் இறங்கி முழு நேர பிரசாரம் செய்தால், வெற்றி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியில் எழுந்துள்ளது.
அரசியல் என்பது வெறுமனே கூட்டத்தை கூட்டுவதோ, ஆவேசமாக பேசுவதோ அல்ல. ஆனால், தன்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை வாக்காளர்கள் மத்தியில் விதைப்பதில் விஜய் பெரும் வெற்றியடைந்துள்ளார். அவரது புதிய கட்சி, தமிழக அரசியலில் ஒரு கேம் சேஞ்சராக மாற அதிக வாய்ப்புள்ளது. அவர் வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கை, தமிழகத்தில் ஒரு மூன்றாவது சக்தி உதயமாவதை உறுதி செய்யலாம்.
வரும் தேர்தல்களில், விஜய்யின் தலைமையில் தமிழக அரசியல் களம் காணவிருக்கும் புதிய மாற்றங்களை எதிர்நோக்கி காத்திருப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
