Bigg Boss Tamil Season 9 : அது அநாகரீகம் இல்லையா.. திவாகரின் தவறான வார்த்தை?.. கண்கலங்கிய கனி.. ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ்.. இதான் நீங்க படிச்ச படிப்பா?..

Diwakar Controversy Statement on Kani : தமிழில் 9 வது பிக் பாஸ் சீசன் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு தான் பார்வையாளர்கள் இருந்து வருகின்றனர். அந்த அளவுக்கு…

Diwakar Controversy on Kani

Diwakar Controversy Statement on Kani : தமிழில் 9 து பிக் பாஸ் சீசன் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு தான் பார்வையாளர்கள் இருந்து வருகின்றனர். அந்த அளவுக்கு போட்டியாளர்களின் செல்பாடும் மட்டமாக இருக்க, கடந்த சில நாட்களில் கொஞ்சம் மாற்றம் நடந்து வருவதாகவே தெரிகிறது. டாஸ்க் மற்றும் கேம் உள்ளிட்டவற்றுள் மிக குறைவான ஆட்களே ஆர்வத்துன் இருந்து ஆடி வருகின்றனர். மற்ற பலரும் சுற்றுலா வந்தது போல பிக் பாஸில் சுற்றி கொண்டிருக்கின்றனர்.

இதற்கு மத்தியில் எப்போதும் போல கேங்க் உருவாகி அது தொடர்பாகவும் நிறைய சண்டைகள் அரங்கேறி வருகிறது. சம்மந்தமே இல்லாமல் சண்டை போடுவது, வேண்டுமென்றே சிலர் மீது வன்மத்தை கக்குவது, ஆபாசமான வார்த்தைகள் என பிக் பாஸ் சூழ்ந்திருக்க, பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் மற்றும் அமித் ஆகிய 4 பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் Wild Card போட்டியாளர்களாக களமிறங்க உள்ளனர்.

திவாகர் சொன்ன வார்த்தை

இதற்கு மத்தியில், திவாகர் சொன்ன வார்த்தை ஒன்று பிக் பாஸ் வீட்டில் பெரிய ஒரு பூதாகரத்தையே உண்டு பண்ணியுள்ளது. முதல் ஆளாக இந்த சீசனில் காலடி எடுத்து வைத்தவர் தான் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர். இப்போது வரை கேமரா முன் ரீல்ஸ் எடுத்து வரும் திவாரை பலரும் உடல் மற்றும் நடிப்பு ரீதியாக பலவீனப்படுத்தி வர, இது தொடர்பாக விஜய் சேதுபதியும் பலரை எச்சரித்திருந்தார்.

ஆனாலும், திவாகர் மீதான சீண்டல்கள் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு மத்தியில் தான் இந்த வார யூனிபார்மை திவாகர் அணியால் பேண்ட் மட்டும் போட்டு வலம்வர, இதனை வீட்டு தல பிரவீன் எச்சரித்திருந்தார். ஆனாலும் கேட்காமல் திவாகர் சண்டை போட்டு கொண்டே இருந்தார்.

அது அநாகரீகம் இல்லையா?..

தொடர்ந்து அனைத்து போட்டியாளர்கள் இருக்கும் போது திவாகரிடம் பேசும் கனி, ‘நீங்க ரீல்ஸ் பண்றத நான் தப்புன்னு சொல்லல. ஆனா, சட்டை போடாம நடிக்கிறது அநாகரீகமா இருக்குஎன கூறுகிறார். இதனை ற்றுக் கொள்ளாத திவாகர், சட்டை போடாமல் இருப்பதில் தவறுன்றுமில்லை என சொன்னதுடன் கனியை பார்த்து, ‘அக்கா, நானும் ஒன்னு சொல்றேன். நீங்க FJ- கட்டிபுடிச்சு பேசுறத பாக்குறப்போ எனக்கு அநாகரீகமா இருக்குன்னு சொல்ல முடியுமா?’ என சம்மந்தமே இல்லால் திவாகர் உதாரணம் சொல்லி முடிப்பதற்குள் கனி மட்டுமில்லாமல் அனைவருக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
Diwakar vs Anbu Gang

அடுத்த கணமே வேதனையுடன் கனி அங்கிருந்து கிளம்ப மற்ற பலரும் திவாகரின் தவறை சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், தனது நடிப்பு பற்றி சொன்னது சரியில்லை என தனது தவறே புரியாமல் திவாகர் தான் சொன்ன உதாரணம் சரி தான் என்றும் வாதிடுகிறார். தன்னுடைய படிப்பு, பின்னணி என மார்தட்டி பேசும் திவாகர், நட்பு ரீதியாக இருப்பதை கூட இப்படி அநாகரீகம் என புரியாமல் சொன்னது பார்வையாளர்களையும் அதிகமாக எரிச்சலூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.