பங்களாதேஷுக்கு ஒரு பாயாசத்தை போட்டுற வேண்டியது தான்.. கைகோர்த்த பாகிஸ்தான் – பங்களாதேஷ்.. பங்களாதேஷ் மீது ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கா? சுதாரித்த இந்தியா.. இவங்களுக்கு எல்லாம் வேற பாஷையில் தான் பேசனும்.. அதிரடி காட்டும் மோடி..!

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள இரண்டு துருவங்களான பாகிஸ்தானும் பங்களாதேஷும், பொது எதிரியான இந்தியாவை மையமாக கொண்டு மீண்டும் இணையக்கூடிய அரசியல் நிகழ்வுகள் வேகமெடுத்து வருவதை பார்க்க முடிகிறது. எனவே இந்தியா தற்போது பங்களாதேஷையும் தாக்க…

inda bangladesh

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள இரண்டு துருவங்களான பாகிஸ்தானும் பங்களாதேஷும், பொது எதிரியான இந்தியாவை மையமாக கொண்டு மீண்டும் இணையக்கூடிய அரசியல் நிகழ்வுகள் வேகமெடுத்து வருவதை பார்க்க முடிகிறது. எனவே இந்தியா தற்போது பங்களாதேஷையும் தாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

1971-ல் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனி நாடாக உருவான பங்களாதேஷ், இன்று இருக்கும் புவிசார் அரசியல் சூழலில் மீண்டும் பாகிஸ்தானுடன் நெருங்குவது அபாயகரமான திருப்பமாகும்.

இதற்கான மையப்புள்ளி இந்தியாதான். இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் உலக அரங்கில் அதன் தற்போதைய மரியாதையான நிலை, இரு நாடுகளின் தலைவர்களான பங்களாதேஷின் தற்போதைய இடைக்கால தலைவர் யூனுஸ் மற்றும் பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோர்களால் பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் இணைந்து பொது எதிரி பாகிஸ்தான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் தற்போது பங்களாதேஷை கருவியாக பயன்படுத்தி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பாதிக்கும் ஒரு அச்சுறுத்தல் நிகழ்வை அரங்கேற்றியுள்ளது.

சமீபத்தில், பங்களாதேஷின் இடைக்காலத் தலைவரான யூனுஸ், பாகிஸ்தான் இராணுவ தளபதி மிர்சா அசிம் முனீரின் வலது கரம் போன்ற ஒரு ஜெனரலுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். அந்த பரிசில், ‘ஆர்ட் ஆஃப் ட்ரையம்ப்’ என்ற புத்தகத்தின் அட்டைப்படமாக இருந்த ஒரு வரைபடத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் ஏழு மாநிலங்கள் பங்களாதேஷின் பிரதேசங்களாக தவறாக காட்டப்பட்டிருந்தன.

இது பங்களாதேஷில் உள்ள பிரிவினைவாத தீவிரவாத குழுக்கள் மத்தியில் நிலவும் ‘க்ரேட்டர் பங்களாதேஷ்’ என்ற கோரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் செயலாகும். இந்த கோரிக்கை, இந்தியாவின் சிக்கன் நெக் பகுதியிலிருந்து அருணாச்சல பிரதேசம் வரையிலான பகுதிகளை தங்களுடையதாக காட்டுகிறது. யூனுஸ் பதவியேற்ற ஆகஸ்ட் 2024 முதல் இந்த பிரச்சாரம் அதிகரித்துள்ளது.

இந்த வரைபடம் வழங்கப்பட்டதில் ஏற்பட்ட பிழையாக இருக்க வாய்ப்பில்லை, மாறாக இது இந்தியாவை சீண்டுவதற்கான தெளிவான தூண்டுதல் செயல் என்றே பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் தலைவர், மற்றொரு நாட்டின் தளபதிக்கு வழங்கும் பரிசு பொருளை ஒரு முறைக்கு பல முறை சரிபார்க்காமல் இருக்க வாய்ப்பில்லை. மேலும், தவறு நடந்திருந்தால் உடனடியாக மறுப்பும் மன்னிப்பும் வந்திருக்கும்.

இந்த நிகழ்வு பங்களாதேஷ்-பாகிஸ்தான் அசுர கூட்டணியை தெளிவாகக் காட்டுகிறது. யூனுஸ் வடகிழக்கு மாநிலங்களை குறித்து நான்கு முறை தொடர்ந்து பேசியது, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. மற்றும் பங்களாதேஷ் இராணுவ உயர் அதிகாரிகள் இடையே சமீபத்தில் நடந்த இரகசிய சந்திப்புகள் ஆகியவை இந்த இந்தியாவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்துகின்றன.

இந்த இரண்டு நாடுகளுக்கும் பொதுவான நண்பன் சீனா. இந்தியாவின் வடகிழக்கு எல்லை பகுதிகளில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினை உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்த இரண்டு நாடுகளை கொண்டு இந்தியாவுக்கு பல முனைகளிலும் அழுத்தத்தை கொடுக்க சீனா திட்டமிடுகிறது.

வடகிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மூலம் இந்தியாவுக்கு பல முனைகளில் அழுத்தத்தை கொடுத்து, சீனாவின் நேரடி எல்லையில் இந்தியா தாக்குதலை நடத்தாமல் தடுப்பது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் உருவாக்கியதை போலவே, வடகிழக்கு மாநிலங்கள் ‘சர்ச்சைக்குரிய பிரதேசம்’ என்ற எண்ணத்தை உலக அளவில் விதைப்பது. சிக்கன் நெக் (சிலிகுரி காரிடார்) பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி, வடகிழக்கு மாநிலங்களுக்கான இந்தியாவின் நிலவழி இணைப்பை அச்சுறுத்துவது.

இந்த நிலையில் இந்தியா எடுக்க வேண்டிய எதிர்நடவடிக்கை மிகவும் முக்கியமானது.
பங்களாதேஷில் பிப்ரவரியில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்தியா ராஜதந்திர எதிர்ப்புக்கு அப்பால் ஒரு வலிமையான நடவடிக்கையை வகுக்க வேண்டும். பங்களாதேஷ் இராணுவம் இந்தியா மீது போர் தொடுக்கும் என்ற பிதற்றலுக்கு அச்சப்பட தேவையில்லை.

ஆனால், பங்களாதேஷ் மண்ணில் இருந்து மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் இயங்கி வரும் தீவிரவாத குழுக்களின் முகாம்கள் செயல்படுவது இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாகும். இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்க, பங்களாதேஷுக்குள் ஊடுருவி, அந்த தீவிரவாத முகாம்களை துல்லியமாகத் தாக்கும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடவடிக்கைக்கு சரியான நேரம் வந்துவிட்டது. இந்த ஒரே ஒரு பாஷை மட்டும்தான் பங்களாதேஷுக்குப் புரியும் என்றும் கூறப்பட்டு வருகிறது.