Aadhirai about her Elimination : தமிழில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, பல நேரங்களில் அதிக விமர்சனத்தை தான் சந்தித்து வருகிறது. இதற்கு காரணம், போட்டியாளர்களின் ஆட்டத்திறன் மற்றும் அவர்கள் சக போட்டியாளர்களை அணுகும் முறை தான். ஏன் வந்தோம் என்பதே தெரியாமல் பலரும் சுற்றித் திரிந்து வரும் நிலையில், அனைத்து சீசன்களை போல இந்த முறையும் குரூப்பாக நிறைய பேர் பிரிந்து ஆடி வருகின்றனர்.
கனி, சபரி, ஆதிரை, FJ, கெமி உள்ளிட்டோர் ஒரு குழுவாக இருக்க, கம்ருதீன், பார்வதி ஒரு பக்கமும், திவாகர் மற்றும் கலையரசன் ஒரு பக்கம் என தனித்தனியாக தங்கள் ஆட்டத்தை ஆடி வருகின்றனர். இதே போல டாஸ்க் என வரும் சமயத்தில் கூட, தங்களுக்கு பிடித்தவர்களுக்காக ஒரு சிலர் நிற்பதால் அதில் வெற்றியாளராக கூட வருபவர்களும் சிலரை சார்ந்து நிற்கும் சூழல் இருந்து வருகிறது.
முன்னதாக, பிக் பாஸ் வீட்டில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் நந்தினி பாதியில் விலக, பிரவீன் காந்தி மற்றும் அப்ஸரா ஆகியோர் எலிமினேட் ஆகியிருந்தனர். இதனைத் தொடர்ந்து 3 வது வாரம் ஆரம்பமான போதே நாமினேஷன் பட்டியல் வெளியாக, பார்வையாளர்களும் யார் வெளியேற வேண்டும் என்பது பற்றி தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். அதில் அதிகம் பேர் சொன்ன பெயர் ஆதிரை தான்.
FJ வால் மாறிய கேம்..
கனி அன்பு கேங்கில் இருக்கும் நபர் என முத்திரை குத்தப்பட்டு வந்த ஆதிரை, முதல் வாரத்தில் சிறப்பாக தான் ஆடினார். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் FJ வால் அவரது ஆட்டத்தின் போக்கே மாறியது. FJ பேசவில்லை என்றால் கோபத்தில் இருப்பது, மற்ற போட்டியாளர்களிடமும் அந்த கோபத்தை காண்பித்து கெட்ட பெயர் எடுத்தது, தகாத வார்த்தைகள் மற்றும் மோசமான செயல்களில் ஈடுபட்டது என ஆதிரையின் சில செயல்பாடுகள் பலரையும் கடுப்பாக்கி இருந்தது.
FJ விடம் இருந்து விலகி இருந்தால் மட்டுமே ஆதிரையால் சிறந்த கேமை பிக் பாஸ் வீட்டுக்குள் ஆட முடியும் என்றும் பலர் தெரிவிக்க, அவர் மாறுவதாக தெரியவில்லை. இதனிடையே, 3 வது பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகியிருந்தார் ஆதிரை. ஒரு பக்கம் இது சரியான முடிவு தான் என்று பலர் சொன்னாலும், இன்னொரு புறம் FJ இல்லாத ஆதிரை ஆட்டத்தை பார்க்க முடியாமல் போய் விட்டது என்றும் பலர் குறிப்பிட்டனர்.
மக்கள் என்னை புரிஞ்சுக்கல..
இதன் பின்னர் வெளியேறிய ஆதிரையிடம், “எங்கே தவறு நடந்தது என நீங்கள் நினைக்குறீர்கள்?” என விஜய் சேதுபதி கேட்க, “தெரியல சார். நான் என்னோட கேமை நல்லா தான் ஆடுனேன். தனிப்பட்ட முறையில உடைஞ்சு போயிருந்தாலும் நான் கம்பேக் கொடுத்து கேம் எல்லாம் சூப்பரா விளையாடி என்னோட முழு உழைப்பையும் போட்டேன். இன்னும் இருந்திருந்தா டாஸ்க் கேம்ல எல்லாம் நல்லா ஆடியிருப்பேன்.

இப்பவும் நான் உள்ள இருக்க தகுதியான ஆள் தான். என்னை விட தகுதி இல்லாதவங்க உள்ள இருக்காங்க, நான் அங்க இல்லன்னா மக்கள் தான் என்ன புரிஞ்சுக்கலனு சொல்லுவேன்” என ஆதிரை விளக்கமளித்துள்ளார். தன்னுடைய கவனத்தில் தவறுகள் இருந்தும் மக்கள் பற்றி ஆதிரை சொன்ன கருத்து விவாதத்தையும் உண்டு பண்ணியுள்ளது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

