மோடி என்னை விட மிகவும் ஆழ்ந்த பேச்சுவார்த்தையாளர்.. உண்மையை ஒப்புக்கொண்ட டிரம்ப்.. இந்தியாவை மிரட்டியும் பணிய வைக்க முடியாது.. நட்பு கொண்டும் பணிய வைக்க முடியாது.. டிரம்புக்கு தனது பலத்தை காட்டிய மோடி.. மோடியின் இந்தியா, அசைக்க முடியாத இந்தியா..!

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் மீது கடுமையான வரிகளை விதித்து மிரட்டுவது, பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் புகழ்ந்து நட்பு பாராட்டுவது என பல வியூகங்களைக் கையாண்டார். ஆனால், இந்தியாவின்…

modi trump1

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் மீது கடுமையான வரிகளை விதித்து மிரட்டுவது, பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் புகழ்ந்து நட்பு பாராட்டுவது என பல வியூகங்களைக் கையாண்டார். ஆனால், இந்தியாவின் தேசிய நலன்களில் மோடி அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தது, டிரம்பை அசைக்க முடியவில்லை.

1. “மிகவும் கடினமானவர்” – டிரம்பின் பகிரங்க ஒப்புதல்

வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் வரிக் கொள்கைகள் என்று வரும்போது யார் சிறந்த பேச்சுவார்த்தை நிபுணர் என்ற கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் அளித்த பதில், இந்திய தலைமை குறித்த உலகத்தின் பார்வையை மாற்றியது: ’மோடி என்னை விட மிகவும் கடினமான பேச்சுவார்த்தையாளர்; அவர் என்னை விட சிறந்த பேச்சுவார்த்தையாளர். இதில் சந்தேகமே இல்லை.” என்று டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

2. வரி மிரட்டல்: வேலை செய்யாத அமெரிக்கத் தந்திரம்

கடந்த சில மாதங்களுக்கு முன் டிரம்ப் நிர்வாகம், இந்திய பொருட்களின் மீது கடுமையான வரிகளை விதித்தது. சில பொருட்களுக்கு 50% வரை வரி உயர்த்தப்பட்டது. இது, அமெரிக்க வேலைகளை பாதுகாக்கவே என்று வெள்ளை மாளிகை நியாயம் கற்பித்தாலும், நியாயமற்றது மற்றும் ஏற்கமுடியாதது என்று இந்தியா கண்டித்தது.

ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட மோடிக்கு, “வாஷிங்டனுக்கு வந்து மதிய உணவை சாப்பிட்டுச் செல்லுங்கள்” என்று டிரம்ப் முறைசாரா அழைப்பு விடுத்தார். ஆனால், பிரதமர் மோடி, “மகாபிரபு ஜகந்நாதரின் புண்ணிய பூமியான ஒடிசாவிற்கு செல்ல வேண்டியது அவசியம்” என்று கூறி, டிரம்பின் அழைப்பை நயமாக நிராகரித்தார். அமெரிக்காவின் வர்த்தக அழுத்தங்களுக்கு பணிய மாட்டோம் என்ற அமைதியான செய்தியை இந்தியா இதன் மூலம் வெளிப்படுத்தியது.

3. நேருக்கு நேர் சந்திப்பை தவிர்த்த மோடி:

டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஆக்ரோஷத்துக்கு இந்தியா பணிவதில்லை என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்த, மோடி தொடர்ந்து டிரம்புடன் நேருக்கு நேர் சந்திப்பதற்கான வாய்ப்புகளை தவிர்த்தார்.

ஆசியான் மாநாட்டைத் தவிர்த்தது ஏன்? அக்டோபர் 2025-இல் கோலாலம்பூரில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் கலந்துகொண்டபோது, மோடி தீபாவளி மற்றும் வரவிருக்கும் பீகார் தேர்தல்களை காரணம் காட்டி நேரடி கூட்டத்தை தவிர்த்து, காணொலி வாயிலாக பங்கேற்றார்.

வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடிவடையாத நிலையில், இரு நாட்டு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பது இந்திய மரபுக்கு உகந்ததல்ல. அத்துடன், வர்த்தக பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிவதில்லை என்ற இந்தியாவின் சுயாட்சி மற்றும் அதிருப்தியை வலியுறுத்துவதற்காகவே மோடி இந்த தூரத்தை கடைப்பிடித்தார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வாஷிங்டன், ஐ.நா. பொதுச்சபை நிகழ்வுகள் மற்றும் ஆசியான் மாநாடு என தொடர்ந்து டிரம்ப் உடன் ஒரே மேடையில் நிற்பதை தவிர்த்ததன் மூலம், “இந்தியா பின்வாங்கி செல்லவில்லை; மாறாக அது தனது தேசிய நலன்களில் கட்டுப்பாட்டுடன் உறுதியாக நிற்கிறது” என்ற செய்தியை மோடியின் இந்தியா உலகிற்கு தெளிவுபடுத்தியது. வல்லரசின் அழுத்தங்களுக்கு பணியாத இந்தியாவின் இந்த நிலைப்பாடு, அதன் வெளியுறவு கொள்கையின் சுதந்திரத்தை பலப்படுத்தியுள்ளது.