ரஜினி – கமல் படத்தை இயக்கப்போவது லோகேஷ் இல்லையாம்… செம டிவிஸ்ட்!

நடிகர் ரஜினியும், கமலும் ஆரம்ப காலங்களில் தொடர்ந்து பல படங்களில் ஒன்றாக நடித்தாலும் ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்திவிட்டனர். அதன்பின் ரஜினி தனது ஸ்டைலில் படங்களில் நடித்து சூப்பர்ஸ்டாராக மாறினார். கமலோ…

நடிகர் ரஜினியும், கமலும் ஆரம்ப காலங்களில் தொடர்ந்து பல படங்களில் ஒன்றாக நடித்தாலும் ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்திவிட்டனர். அதன்பின் ரஜினி தனது ஸ்டைலில் படங்களில் நடித்து சூப்பர்ஸ்டாராக மாறினார். கமலோ புதுப்புது பரிசோதனை முயற்சிகளை செய்து வந்தார்.

ரஜினியும் இணைந்து நடித்து 45 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும், ஆசையும் ரசிகர்களிடம் இருக்கிறது.

அதை பூர்த்தி செய்யும் விதமாக ரஜினியும் கமலும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள், அதை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. கமலுடன் இணைந்து நடப்பது உண்மை என்றாலும் ‘இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை’ என செய்தியாளர்களிடம் கூறினார் ரஜினி. அதேபோல், ஒரு மேடையில் கமலும் உறுதியான தகவலை சொல்லவில்லை.

இந்நிலையில், ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. ஏனெனில் லோகேஷ் சொன்ன அதிரடியான ஆக்சன் கேங்ஸ்டர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லையாம்.
அதேநேரம் ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நெல்சன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்துப் போய்விட அந்த கதையில் கமலுடன் இணைந்து நடிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறாராம். அநேகமாக இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருட இறுதி அல்லது 2017 ஆரம்பத்தில் துவங்கும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு பின்னரே அவர் நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.